ஐசிசி தரவரிசையில் சறுக்கிய இந்தியா… கோலி பதவிவிலகல் காரணமா?

ஐசிசி தரவரிசைக்கான பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருந்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி தற்போது 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2, 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியதை அடுத்து தரவரிசையில் சறுக்கியது. ஆனால் கேப்டன் கோலி பதவிவிலகியதை அடுத்து ஐசிசி தரவரிசையில் இந்தியா சறுக்கலைச் சந்தித்து இருப்பதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

விராட் கோலி கேப்டன் பதவிக்கு வந்தபோது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை 7 ஆவது இடத்தில் இருந்தது. ஒருநாள், டி20 போட்டிகளில் கோலி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தாலும் டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை அவர் நெம்பர் 1 நிலைமைக்கு உயர்த்தினார். ஆனால் தற்போது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 2021 ஐசிசி தரவரிசையில் 3 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது.

அதேபோல ஐசிசி தேர்வுசெய்யும் சிறந்த ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் ஒரு இந்திய வீரர்கள் கூட இடம்பெறவில்லை. ஆனால் டெஸ்ட் அணியில் இருந்து பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா, விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட், பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய மூவரும் இடம்பிடித்துள்ளனர். ரோஹித் சர்மா 11 போட்டிகளில் விளையாடி 906 ரன்களை குவித்துள்ளார். இதில் 2 சதம், 4 அரைச்சதமும் அடங்கும். மேலும் ரிஷப் பண்ட் 12 போட்டிகளில் விளையாடி 748 ரன்களைக் குவித்துள்ளார். அஸ்வின் 9 போட்டிகளில் 54 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இதனால் ரஹானே, புஜாரா, கோலி, கே.எல்.ராகுல் என எந்த இந்திய பேட்ஸ்மேனும் ஐசிசி தரவரிசைக்கான அணியில் இடம்பெறவில்லை. அதோடு 3 ஆண்டுகள் தொடர்ந்து கேப்டன், பேட்ஸ்மேன் என்ற அடிப்படையில் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்திருந்த கோலி முதல் முறையாக ஐசிசி தரவரிசையில் இடம்பெறவில்லை. இது அவர் மீதான விமர்சனத்திற்கு வழிவகுத்திருக்கிறது.

More News

திடீர் ஓய்வை அறிவித்த சானியா மிர்சா… என்ன காரணம்?

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இணைந்து விளையாடிவரும் பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா

க்யூவில் நிற்பதற்கு ஆயிரக்கணக்கில் சம்பளம்… வித்தியாசமாக அசத்தும் இளைஞர்!

மனித வாழ்க்கையில் நாம் தினம்தோறும் மருத்துவமனை, தியேட்டர்,

45,000 மைல் வேகத்தில் பூமியை நோக்கி பறந்துவந்த விண்கல்… நடந்தது என்ன?

விண்வெளியில் ஆயிரக்கணக்கான சிறிய கோள்களும் விண்கற்களும்

திரைப்படம் மூலம் விடுத்த கோரிக்கை: முதல்வரின் உத்தரவால் சமுத்திரகனி மகிழ்ச்சி!

திரைப்படம் மூலம் விடுத்த கோரிக்கையை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றி உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளார். 

தனுஷ்-ஐஸ்வர்யா மீண்டும் இணைவார்கள்: ரசிகர்களின் நம்பிக்கைக்கு இதுதான் காரணமா?

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தாங்கள் பிரியப்போவதாக தங்களது சமூக வலைதளங்களில் தெரிவித்தாலும் இருவரும் மீண்டும் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.