விஜயகாந்த் - இப்ராஹிம் ராவுத்தர் நட்பை திரைப்படமாக எடுக்க போகிறேன்: சொன்னது யார் தெரியுமா?
- IndiaGlitz, [Monday,January 01 2024]
தமிழ் திரை உலகில் எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் மிகச் சிறந்த நண்பர்களாக இருந்தது போல், சாதி மதங்களை தாண்டி உண்மையான நட்பாக விஜயகாந்த் மற்றும் இப்ராஹிம் ராவுத்தர் இருந்தனர். ஆனால் இந்த நட்பில் விஜயகாந்த் அரசியல் கட்சியை தொடங்கியதால் விரிசல் ஏற்பட்டதாகவும் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சில ஆண்டுகாலம் பேசாமல் இருந்ததாகவும் கூறப்படுவது உண்டு.
இந்த நிலையில் விஜயகாந்த் தற்போது காலமாகி உள்ள நிலையில் இப்ராஹிம் ராவுத்தர் மகன் விஜயகாந்த் குறித்து தனது மனம் விட்டு பேசி உள்ளார். அதில், ‘விஜயகாந்த் இப்ராஹிம் ராவுத்தர் நட்பை திரைப்படமாக எடுக்க போகிறேன் என்றும் கூறியிருந்தார்.
விஜயகாந்த் மற்றும் இப்ராஹிம் ஆகிய இருவரது நட்பில் கொஞ்சம் கூட சுயநலம் இல்லை, அவர்கள் ஒரு கட்டத்தில் பிரிந்து இருந்தாலும் எதிரியாக ஒருவரை ஒருவர் நினைக்கவில்லை என இப்ராஹிம் ராவுத்தர் மகன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இருவரும் பிரிந்து இருந்தாலுமே ஒருவர் ஒருவர் விசாரித்துக் கொண்டு தான் இருந்தார்கள், உடல்நலத்தில் ஒருவர் ஒருவர் அக்கறை காட்டுகிறாரா என்பதை அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்று அவர் தெரிவித்தார்.
எங்கள் அப்பா உடல் நலம் இன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது விஜயகாந்த் நேரில் வந்து விசாரித்தார், ஆனால் அப்பாவால் எழுந்து பேச முடியவில்லை என்று அவர் தெரிவித்தார். எப்படியும் அவரை காப்பாற்றி விடலாம் என்று தான் நினைத்திருந்தோம், ஆனால் அப்பா மறைந்த போது கேப்டன் கண் கலங்கி நின்றார், அவரால் அந்த இழப்பை ஜீரணிக்க முடியவில்லை என்றும் கூறினார்.
இந்த நிலையில் தான் விஜயகாந்த் - இப்ராஹிம் நட்பை ஒரு திரைப்படமாக எடுக்க போகிறேன் என்றும் விரைவில் அது குறித்து அறிவிப்புகளை வெளியிடுவேன் என்றும் இப்ராஹிம் மகன் தெரிவித்துள்ளார்.