ஐயா.. தமிழ் இயக்குனர்களே, இனிமேல் இப்படி பண்ணாதீங்க.. ட்வீட் போட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் இயக்குனர்களே இனிமேல் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பின்னனியுடைய படங்களை எடுக்காதீர்கள் என தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த தர்பார் படம் நேற்று வெளியானது. படத்தில் சுனில் ஷெட்டி வில்லனாகவும் நிவேதா தாமஸ் ரஜினிக்கு மகளாகவும் நடித்திருந்தினர். இந்த படத்தில் ரஜினி மும்பை கமிஷனராக ஐ.பி.எஸ் அதிகாரி வேடமிட்டு நடித்திருக்கிறார். படத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான அலெக்ஸ் பால் மேனன் "ஐயா இனிமேல் ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ். பின்புலம் வைத்து எந்த படமும் எடுக்காதீர்கள்.. உங்கள் லாஜிக் ஓட்டைகளில் எங்கள் மூளை விழுந்து கிடக்கிறது." என்று ட்வீட் போட்டு உள்ளார்.
மேலும் மனித உரிமைகள் ஆணையம் பற்றி படத்தில் தவறாக காண்பிக்கப்பட்டிருந்ததையும் குறிப்பிட்டு கிண்டலடித்து இருந்தார்.
ஐயா, டேய் தமிழ்
— Alex Paul Menon (@alexpaulmenon) January 10, 2020
இயக்குனர் களா ...
இனிமே இந்த IAS ,IPS பின்புலம் வச்சி எந்த படமும் எடுக்காதீங்க ஐயா .. உங்க லாஜிக் ஓட்டைல எங்க மொத்த மூளையும் விழுந்து கிடக்குது ..
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments