ஐயா.. தமிழ் இயக்குனர்களே, இனிமேல் இப்படி பண்ணாதீங்க.. ட்வீட் போட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி..!

தமிழ் இயக்குனர்களே இனிமேல் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பின்னனியுடைய படங்களை எடுக்காதீர்கள் என தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த தர்பார் படம் நேற்று வெளியானது. படத்தில் சுனில் ஷெட்டி வில்லனாகவும் நிவேதா தாமஸ் ரஜினிக்கு மகளாகவும் நடித்திருந்தினர். இந்த படத்தில் ரஜினி மும்பை கமிஷனராக ஐ.பி.எஸ் அதிகாரி வேடமிட்டு நடித்திருக்கிறார். படத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான அலெக்ஸ் பால் மேனன் ஐயா இனிமேல் ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ். பின்புலம் வைத்து எந்த படமும் எடுக்காதீர்கள்.. உங்கள் லாஜிக் ஓட்டைகளில் எங்கள் மூளை விழுந்து கிடக்கிறது. என்று ட்வீட் போட்டு உள்ளார்.

மேலும் மனித உரிமைகள் ஆணையம் பற்றி படத்தில் தவறாக காண்பிக்கப்பட்டிருந்ததையும் குறிப்பிட்டு கிண்டலடித்து இருந்தார்.

More News

தீபிகாவை அடுத்து சன்னிலியோனுக்கு ஆதரவு குவியுமா?

சமீபத்தில் ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்திற்கு பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நேரில் சென்று ஆதரவு அளித்தார்.

சந்தானம் நடித்த 'டகால்டி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' மற்றும் ஏ1 ஆகிய இரண்டு படங்கள் அவருக்கு கடந்த ஆண்டு வெற்றிப் படங்களாக அமைந்த நிலையில், இந்த ஆண்டு அவர் நடித்த மூன்று படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

போரே வந்தாலும் பாகிஸ்தான் கலந்து கொள்ளாது.. கடந்த கால தவறுகளை சரிசெய்து கொள்கிறோம்..!

இரான் மற்றும் சவுதி அரேபியாவின் நட்புறவை மீட்டெடுக்க பாகிஸ்தான் முயற்சி செய்யும். அமெரிக்கா மற்றும் இரான் இடையே உள்ள வேறுபாடுகளைத் தவிர்க்க, பாகிஸ்தான் உதவி செய்யவும் தயாராக உள்ளது.

‘Z’ பிரிவு, ‘Y’ பிரிவு பாதுகாப்பு குறித்த ஒரு விரிவான விளக்கம்

அரசியல் தலைவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வது தற்போது மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கடமையாகக் கருதப்படுகிறது.

திரும்பும் போது திறந்த கதவு.. காரில் இருந்து கீழே விழுந்த குழந்தை..! அதிர்ச்சி வீடியோ.

காரில் இருந்து குழந்தை ஒன்று தவறிவிழும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.