'மகாபாரதம்' கிருஷ்ணன் நடிகர் மீது ஐஏஎஸ் மனைவி பகீர் குற்றச்சாட்டு.. என்ன நடந்தது?
Send us your feedback to audioarticles@vaarta.com
தூர்தர்ஷனில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில் கிருஷ்ணன் கேரக்டரில் நடித்த நடிகர் மீது அவரது ஐஏஎஸ் மனைவி பகீர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாபாரதம் தொடரில் கிருஷ்ணராக நடித்தவர் நடிகர் நிதிஷ் பரத்வாஜ், ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும், விவாகரத்து வழக்கு தற்போது கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் நிதிஷ் பரத்வாஜ் திடீரென தனது குழந்தைகளை மனைவி பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் தன்னிடமிருந்து குழந்தைகளை பிரிக்க குழந்தைகளை அவர் வெவ்வேறு பள்ளிகளுக்கு மாற்றி வருவதாகவும் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாருக்கு விளக்கம் அளித்துள்ள ஸ்மிதா, நிதிஷ் என்னை வேலையை விடுமாறு வற்புறுத்தினார், ஆனால் நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் என்னிடம் விவாகரத்து கேட்டார், நான் விவாகரத்துக்கு ஒப்புக்கொண்ட நிலையில் தான் என்னிடம் பணம் கேட்டார், அதற்கு நான் மறுத்தபோது இந்த புகார் நாடகத்தை அரங்கேற்றி உள்ளார் என்று கூறியுள்ளார்.
மேலும் ’என்னுடைய குழந்தைகள் எனது உயிரினும் மேலானவர்கள் ,குழந்தைகளுக்காக நிதிஷ் இதுவரை எந்த செலவும் செய்யவில்லை, என் மூச்சு இருக்கும் வரை என் குழந்தைகளை நான் பாதுகாப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com