ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் பெண் அதிகாரிகள் மோதல் கதையில் பிரபல நடிகை..!

  • IndiaGlitz, [Saturday,June 03 2023]

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மோதல் குறித்து உண்மை சம்பவத்தின் கதையில் பிரபல நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன

கர்நாடக மாநிலத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது ஊழல் புகார்களை வெளியிட்டார் என்பதும் அவர் ஆண் அதிகாரிகளுடன் இருந்த தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து மைசூர் போலீசாரிடம் புகார் அளித்த ஐஏஎஸ் அதிகாரி, ஐபிஎஸ் அதிகாரியை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று விமர்சனம் செய்தார். இந்த நிலையில் கர்நாடக மாநில அரசு இருவரையும் பணியிடம் மாற்றம் செய்தது என்பதும் இருவருக்கும் துறை ஒதுக்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பெண் அதிகாரிகளின் இந்த மோதல் குறித்த கதை அம்சம் கொண்ட திரைப்படத்தில் நடிகை ராகினி திரிவேதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழில் ’நிமிர்ந்து நில்’ ’கிக்’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தெலுங்கில் ’ஒன் டு ஒன்’ என்ற படத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளாக நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ’ராகினி ஐபிஎஸ் வெர்சஸ் ஐஏஎஸ்’ என்ற பெயரில் இந்த உண்மை சம்பவ திரைப்படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.