ரூ.500 செலவில் திருமணம் செய்து கொண்ட ஐ.ஏ.எஸ். காதல் ஜோடி
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஒருவர் ரூ.500 கோடி செலவில் தனது மகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி வைத்தார் என்பது அனைவரின் தெரிந்ததே. இந்நிலையில் ஐ.ஏ.எஸ். காதல் ஜோடி ஒன்று வெறும் ரூ.500 செலவில் மிக எளிமையாக தங்கள் திருமணத்தை ரிஜிஸ்தர் அலுவலகத்தில் நடத்தி உள்ளனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்த ஆசிஷ் வசிஷ்டா மற்றும் பஞ்சாபை சேர்ந்த சலோனி ஆகியோர் கடந்த 2013-ஆம் ஆண்டு முசோரி லால் பகதூர் சாஸ்திரி தேசிய ஐஏஎஸ் பயிற்சி கல்லூரியில் பயின்றபோது காதல் வயப்பட்டனர். இருவரும் வெற்றிகரமாக ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று தற்போது மத்தியபிரதேச மாநிலம் கோகத் துணை ஆட்சியராக ஆசிஷ் வசிஷ்டாவும், தெலுங்கானா மாநிலம் விஜயவாடாவில் துணை ஆட்சியராக சலோனியும் பணியாற்றி வருகிறார்
இந்நிலையில் இவர்களது திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நேற்று முன் தினம் மிக எளிமையாக ரூ.500 செலவில் மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் நடந்தது. இருவரும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்டு பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரூபாய் தட்டுப்பாடு காரணமாக ஒருசிலர் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டாலும், இந்த ஜோடிக்கு வசதி இருந்தும் ஆடம்பரத்தை விரும்பாமல் ரிஜிஸ்தர் திருமணம் செய்து கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout