இருட்டு அறையில் முரட்டு குத்து முதல் நாள் வசூல்

  • IndiaGlitz, [Saturday,May 05 2018]

கவுதம் கார்த்திக் நடிப்பில் நேற்று வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் பெரிய ஸ்டார்கள் படங்களுக்கு இணையாக காலை சிறப்பு காட்சி திரையிடப்பட்டு அரங்கு நிறைந்த காட்சிகயாக இருந்தது.

பிரமாதமான புரமோஷன் காரணமாக இந்த படத்தின் முதல் நாள் வசூல் அபாரமாக இருந்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் தமிழகம் முழுவதும் முதல் நாளில் ரூ.2.25 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ரூ.34 லட்சமும், செங்கல்பட்டு பகுதியில் ரூ.72 லட்சமும், கோவையில் ரூ.38 லட்சமும், நெல்லை-குமரி பகுதியில் ரூ.11 லட்சமும் வசூல் செய்துள்ளது.

கவுதம் கார்த்திக்கை பொருத்தவரையில் இந்த படம் தான் அவருக்கு மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை கொடுத்த படம் என்று கூறலாம்.  இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் இந்த வாரம் இந்த படத்தின் வசூல், தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்களை திருப்தி அடையும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' ரிலீஸ் தேதி

கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்து ஒவ்வொரு வாரமும் தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட வெளியீட்டு குழுவின் அனுமதி பெற்று மூன்று படங்கள் ரிலீஸ் ஆகி வருவது தெரிந்ததே.

ஜிவி பிரகாஷின் 'செம' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நிலையில் அவருடைய அடுத்த படமான 'செம' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெஜினாவின் முதல் முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்

கார்த்திக், கவுதம் கார்த்திக் முதன்முதலில் இணைந்து நடித்து வரும் 'Mr.சந்திரமெளலி படத்தின் நாயகியாக நடிகை ரெஜினா நடித்து வந்தார் என்பது தெரிந்ததே.

'மன்னன்' விஜயசாந்தி கேரக்டரில் நயன்தாரா?

ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கிய 'மன்னன் என்ற வெற்றி படத்தில்  விஜயசாந்தி நடித்த போல்டான கேரக்டர் போன்ற ஒரு கேரக்டரில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

தமிழக நீட் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விஷால்

நீட் தேர்வு நாளை ஞாயிறன்று நடைபெறவுள்ள நிலையில் தமிழக மாணவர்கள் சிலருக்கு மட்டும் வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்த விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.