விஜய் வடிவில் ரஜினியை பார்க்கின்றேன். இயக்குனர் மகேந்திரன்

  • IndiaGlitz, [Thursday,March 31 2016]

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த படத்தை இதுவரை இல்லாத வகையில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த படத்தின் பிசினஸ் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் இந்த படத்தின் மெயின் வில்லனாக நடித்துள்ள மகேந்திரன் பிரபல வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜய் குறித்து கூறியபோது, "ரஜினி சாரிடம் என்ன இயல்பை ஃபீல் பண்ணுவேனோ, விஜய்யிடமும் அதே இயல்பு. விஜய்யிடம் நான் ரஜினியைப் பார்க்கிறேன்' என்று கூறியுள்ளார்.

மேலும் "விஜய் மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு. வணிகரீதியான படங்களில்கூட அவரின் யதார்த்தமான நடிப்பு, ஓர் இயக்குநராக எனக்குப் பிடிக்கும். அந்த மிகச் சிறந்த மனிதரையும் பிடிக்கும்' என்று கூறியுள்ளார்.

மேலும் தன் வாழ்க்கையில் ஒருநாள்கூட அவர் ஷேவ் பண்ணாமல் இருந்தது இல்லை என்றும் அப்படி இருந்த தான் 'தெறி' படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் தனது கேரக்டருக்காக தாடி வளர்த்ததாகவும் இயக்குனர் மகேந்திரன் கூறியுள்ளார்.

More News

'தெறி'யை கேரளாவில் ரிலீஸ் செய்கிறது பிரபல நடிகையின் நிறுவனம்

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த 'தெறி' படத்தின் கேரள மாநில உரிமையை 'ஆகஸ்ட் சினிமாஸ்' என்ற நிறுவனம் பெற்றதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் கேரள ரிலீஸ் உரிமை மற்றொரு பிரபல நடிகை மற்றும் நடிகர் இணைந்து நடத்தி வரும் நிறுவனத்திற்கு கைமாறிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

கேரளாவில் 'தெறி'யை ரிலீஸ் செய்யும் 2 பிரபல நடிகர்கள்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி கொண்டே வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமை வியாபாரமும் கிட்டத்தட்ட...

சூர்யாவின் '24' படத்தின் புதிய அப்டேட்

சூர்யா மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள '24' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து...

தனுஷுடன் 3வது முறையாக இணைந்தது லைகா

தனுஷ் தயாரிப்பில் ஏற்கனவே உருவாகிய 'நானும் ரவுடிதான்' மற்றும் 'விசாரணை' ஆகிய இரண்டு படங்களையுமே லைகா நிறுவனம்தான் வாங்கி வெளியிட்டது...

ரஜினி தயாரிப்பாளர் படத்தில் தனுஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றதோடு விநியோகிஸ்தர்களின் அதிருப்தியையும் சம்பாதித்தது...