தமிழ் »
Cinema News »
மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வர தயார். ஜெ. அண்ணன் மகள் தீபா பரபரப்பு பேட்டி
மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வர தயார். ஜெ. அண்ணன் மகள் தீபா பரபரப்பு பேட்டி
Saturday, December 10, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோதும் சரி, இறுதி சடங்கு செய்த போதும் சரி, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவை சசிகலா குழுவினர் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவின் ரத்த உறவான தீபாவுக்கு அத்தைக்கு செய்ய வேண்டிய அடிப்படை உரிமைகளை கூட அனுமதிக்காதது அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த தீபா, 'நான் பிறந்தது போயஸ் இல்லத்தில்தான். ஆனால் பிற்காலத்தில் எங்கள் குடும்பம் சசிகலாவால் வெளியே விரட்டப்பட்டது. எனது அத்தை அவரது ரத்த உறவுகளிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்தப்பட்டார். எனது அத்தை சிறையில் அடைக்கப்பட காரணமே அவரை சுற்றி இருந்த மோசமான நபர்கள்தான். சரியான பராமரிப்பு இல்லாததால் எனது அத்தை உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். அவருக்கு தேவையான சிகிச்சை உரிய நேரத்தில் தரப்படவில்லை. கொடுத்த சிகிச்சை குறித்த தகவல்களும் வெளியே வரவில்லை.
எனது அத்தை மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது என்னை அனுமதிக்கவில்லை. அதிமுகவை பொறுத்தளவில் ஜெயலலிதாவுக்கு பிறகு யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்து முன்கூட்டியே முடிவு எடுக்கப்படவில்லை. ஜெயலலிதா தனது சொத்துக்கள் குறித்து உயில் எழுதி வைத்துள்ளதாக வரும் தகவல் பற்றியும் எனக்கு எதுவுமே தெரியாது. மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வர தயாராக உள்ளேன்' என்று கூறியுள்ளார். அத்தை ஜெயலலிதாவை போலவே ஆங்கிலத்தில் சரளமான பேசிய தீபா, எதிர்காலத்தில் ஜெயலலிதாவின் இடத்தை பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments