மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வர தயார். ஜெ. அண்ணன் மகள் தீபா பரபரப்பு பேட்டி

  • IndiaGlitz, [Saturday,December 10 2016]

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோதும் சரி, இறுதி சடங்கு செய்த போதும் சரி, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவை சசிகலா குழுவினர் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவின் ரத்த உறவான தீபாவுக்கு அத்தைக்கு செய்ய வேண்டிய அடிப்படை உரிமைகளை கூட அனுமதிக்காதது அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த தீபா, 'நான் பிறந்தது போயஸ் இல்லத்தில்தான். ஆனால் பிற்காலத்தில் எங்கள் குடும்பம் சசிகலாவால் வெளியே விரட்டப்பட்டது. எனது அத்தை அவரது ரத்த உறவுகளிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்தப்பட்டார். எனது அத்தை சிறையில் அடைக்கப்பட காரணமே அவரை சுற்றி இருந்த மோசமான நபர்கள்தான். சரியான பராமரிப்பு இல்லாததால் எனது அத்தை உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். அவருக்கு தேவையான சிகிச்சை உரிய நேரத்தில் தரப்படவில்லை. கொடுத்த சிகிச்சை குறித்த தகவல்களும் வெளியே வரவில்லை.
எனது அத்தை மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது என்னை அனுமதிக்கவில்லை. அதிமுகவை பொறுத்தளவில் ஜெயலலிதாவுக்கு பிறகு யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்து முன்கூட்டியே முடிவு எடுக்கப்படவில்லை. ஜெயலலிதா தனது சொத்துக்கள் குறித்து உயில் எழுதி வைத்துள்ளதாக வரும் தகவல் பற்றியும் எனக்கு எதுவுமே தெரியாது. மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வர தயாராக உள்ளேன்' என்று கூறியுள்ளார். அத்தை ஜெயலலிதாவை போலவே ஆங்கிலத்தில் சரளமான பேசிய தீபா, எதிர்காலத்தில் ஜெயலலிதாவின் இடத்தை பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

More News

பல்கேரிய போலீசிடம் சிக்கிய சில்வாவை அஜித் காப்பாற்றினாரா?

வழக்கமாக அஜித் பட செய்திகள், அஜித்தின் புதிய ஸ்டில்கள்தான் டிரெண்டில் இருக்கும். ஆனால் தற்போது ஸ்டண்ட் மாஸ்டர்...

கணேஷ் என் தண்டனையில் இருந்து தப்பிக்கவே முடியாது. விவாகரத்து குறித்து நடிகை ஆர்த்தி

பிரபல காமெடி நடிகை ஆர்த்தி, தனது கணவர் கணேஷை விவாகரத்து செய்துவிட்டதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைத்தளங்களில் மிக வேகமாக வதந்தி பரவி வருகிறது...

ஏடிஎம் மிஷினுக்கு திதி. பிரதமருக்கு லட்டு பிரசாதம் அனுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள்

பாரத பிரதமர் நரேந்திரமோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பு வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

அடுத்த அதிமுக பொதுச்செயலாளர் யார்? பொன்னையன் தகவல்

மறைந்த செல்வி ஜெயலலிதா வகித்த வந்த அதிகாரம் மிக்க பதவியான அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்படுவார்...

'பாகுபலி' இயக்குனருக்கு ஆந்திர முதல்வர் வைத்த கோரிக்கை

இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று 'பாகுபலி'. கடந்த ஆண்டு வெளிவந்த இந்த படம் உலகம்...