எனக்கு 1, ரஜினிக்கு 1000. இதை சொன்ன பிரபல நடிகர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,September 01 2016]

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகிய 'ஜனதா கேரேஜ்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. ஜூனியர் என்.டி.ஆர்., சமந்தா நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் பிரபல மலையாள நடிகர் மோகன்லாலும் நடித்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு மிகபெரிய அளவில் உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஜூனியர் என்.டி.ஆர் மிகுந்த மெச்சூரிட்டியுடன் பதில் கூறியுள்ளார். ரஜினியின் 'கபாலி' படத்தை விட அதிக காட்சிகள் 'ஜனதா கேரேஜ்' திரையிடப்படுவது குறித்து? என்று நிருபர் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய ஜூனியர் என்.டி.ஆர், 'நான் இப்பொழுதுதான் நடிப்பில் முதல் ஸ்டெப்பில் உள்ளேன். ரஜினி 1000வது ஸ்டெப்பில் உள்ளார். தயவு செய்து அவரோடு என்னை ஒப்பிட வேண்டாம்' என்று கூறியுள்ளார்.
மேலும் தான் நடிக்கும் படத்தின் வெற்றி தோல்வி தன்னை எந்தவிதத்திலும் பாதிக்காது என்றும் அப்படியே பாதிப்பு இருந்தாலும் எனது குடும்பத்தினர்களை பார்த்தவுடன் அந்த கவலையில் இருந்து உடனே வெளியே வந்துவிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். முன்பெல்லாம் சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி கொடுக்கும் ஜூனியர் என்.டி.ஆரின் பேச்சில் தற்போது மெச்சூரிட்டி அதிகமாக இருப்பதாக பத்திரிகையாளர்கள் கருதுகின்றனர்.