நானாக இருந்திருந்தால் காலை உடைத்திருப்பேன்: விமான பாலியல் தொல்லை குறித்து பிரபல நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் அமீர்கானின் 'தங்கல்' படத்தில் நடித்த சைரா வாசிம் டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் பயணம் செய்தபோது தனக்கு பின்னால் உட்கார்ந்திருந்தவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அழுதுகொண்டே தனது சமூகவலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து திரையுலகினர்களும்,சமூக வலைத்தள பயனாளிகளும் பலர் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். ஒருசிலர் சைரா வாசிமுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: விமானத்தில் தான் சந்தித்த பாலியல் தொல்லையை அவர் துணிச்சலுடன் தெரிவித்திருக்கிறார். அதேசமயம், அந்த நபர் தன்னுடைய பாதத்தை நடிகையின் கை மீது வைத்து குட்டித்தூக்கம் போட்டதாக பெரும்பாலானோர் சொல்கிறார்கள். என்னை பொறுத்தமட்டில், இது மாபெரும் தவறு. சாயிரா வாசிம் இடத்தில் நான் இருந்திருந்தால், அவரது காலை உடைத்திருப்பேன்' என்று கூறியிருந்தார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments