அஜித்துக்கு குரல் கொடுக்க ஆசை: தனுஷ்

  • IndiaGlitz, [Thursday,August 11 2016]

நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பலவித அவதாரங்களில் கோலிவுட் திரையுலகில் ஜொலித்து வருபவர் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ். தனது பிசியான ஷெட்யூலிலும், தன்னுடைய படங்களுக்கு மட்டுமின்றி மற்ற நடிகர்களின் படங்களுக்கும் தனுஷ் பாடி வருவது அறிந்ததே.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், 'அஜித்துக்காக எனது குரலில் நான் ஒரு பாடல் பாட வேண்டும்' என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இந்த ஆசை விரைவில் நிறைவேறும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். தனுஷின் ஆசை விரைவில் நிறைவேற நமது வாழ்த்துக்கள்
இந்நிலையில் தனுஷ் தற்போது 'வடசென்னை' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். விரைவில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.