close
Choose your channels

ரஜினியை அடுத்து அமிதாப் குணமாக கமல்ஹாசன் வாழ்த்து

Sunday, July 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சன் ஆகிய இருவருக்கும் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதனால் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருவரும் தற்போது மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இருவருக்குமே லேசான கொரோனா அறிகுறி மட்டுமே இருப்பதால் விரைவில் குணம் பெறுவார்கள் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன

மேலும் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயாபச்சன் மற்றும் அபிஷேக்பச்சன் மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் அவர்களுடைய மகள் ஆராதனா ஆகிய மூவருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் கொரோனாவில் இருந்து விரைந்து மீண்டு வர வேண்டும் என இந்திய திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தும் பிரார்த்தனை செய்தும் வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் சற்று நேரத்திற்கு முன்பு அமிதாப் மற்றும் அபிஷேக் ஆகிய இருவரிடமும் தொலைபேசியில் பேசி விரைவில் இருவரும் குணமாக வாழ்த்து தெரிவித்ததாக செய்திகள் வெளியானது

இந்த நிலையில் தற்போது ரஜினியை அடுத்து கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டரில் இருவரும் விரைந்து குணமாக வாழ்த்து தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார் மேலும் இந்திய மருத்துவர்கள் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், அவர்கள் தங்கள் சிகிச்சையால் அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரையும் குணப்படுத்தி விடுவார்கள் என்று தான் நம்புவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் அமிதாப் அவர்கள் குணமாகி மீண்டும் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் தனது டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment