விவேக் விட்டு சென்ற பணிகளை தொடர முயற்சிப்பேன்: ராகவா லாரன்ஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் இன்று காலை காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விவேக்கின் மறைவு குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களது டுவிட்டர் பக்கங்களில் அவருடைய நினைவலைகளை பதிவு செய்து வரும் நிலையில் சற்று முன்னர் நடிகரும் இயக்குனரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் விவேக் குறித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பத்மஸ்ரீ டாக்டர் விவேக் அவர்களின் மறைவு செய்தி கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன். அவருடைய இழப்பு தமிழ் சினிமா உலகிற்கு மட்டுமின்றி நமது சமூகத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும். அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் விவேக் அவர்கள் சமுதாயத்திற்கு செய்ய விரும்பிய அனைத்து நல்ல சேவைகளையும் என்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்து தொடர்ந்து செய்வேன்’ என்றும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
I’ll try my best and continue to do all the good work’s he wanted to do for the society ?? #RIPviveksir pic.twitter.com/GypfnZVk1L
— Raghava Lawrence (@offl_Lawrence) April 17, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com