அடுத்த மகனையும் ராணுவத்திற்கு அனுப்புவேன்: வீரமரணம் அடைந்த வீரரின் தந்தை அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத அமைப்பு ஒன்றின் மனிதவெடிகுண்டு தாக்குதலால் 40க்கும் மேற்பட்ட சி,ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம் நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினர்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்பட அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பஹல்பூர் என்ற பகுதியை சேர்ந்த ரத்தன் தாகூர் என்பவரும் ஒருவர். இவருடைய மரணம் குறித்த செய்தி அறிந்ததும் இவரது தந்தை செய்தியாளர்களிடம் கூறியபோது, 'தாய்நாட்டிற்காக எனது ஒரு மகனை இன்று இழந்துள்ளேன். ஆனாலும் எனது அடுத்த மகனையும் தாய்நாட்டிற்காக சேவை செய்ய ராணுவத்திற்கு விரைவில் அனுப்பி வைப்பேன். இந்த இழப்பிற்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆகவேண்டும்' என்று கூறினார்.
இந்த தந்தையின் தேசப்பற்று மெய்சிலிரிக்க வைப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவாகி வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com