5 நிமிசம் கதவை திறக்கறேன்: வெளிய போறவங்க போங்க: கமல் ஆவேசம்

  • IndiaGlitz, [Saturday,August 18 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 60 நாட்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் நிகழ்ச்சியே முடிந்துவிடும். ஆனால் இன்று வரை கமல் உள்பட ஒருவரும் பார்வையாளர்களின் நன்மதிப்பை பெறாதது இந்த நிகழ்ச்சி எங்கே சென்று கொண்டிருக்கின்றது என்பதை தெளிவாக காட்டுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் சண்டை வராத நாட்களே இல்லை எனலாம். குறிப்பாக யாஷிகா தவிர எல்லோரிடமும் சண்டை போட்ட பெருமை ஐஸ்வர்யாவுக்கு உண்டு. ஆனால் ஐஸ்வர்யாவைத்தான் பிக்பாஸ் அடிக்கடி காப்பாற்றி சக பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருப்பதற்கு பிக்பாஸூம் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய புரமோ வீடியோவில் கமல் முன்னிலையில் ஐஸ்வர்யா கோரத்தாண்டவம் ஆடுகிறார். மகத் மற்றும் மும்தாஜிடம் அவர் சண்டை போடுவதை பார்த்துவிட்டு 'ஒரு பெரிய துர்கா பூஜையே அங்கு நடந்து கொண்டிருப்பதாக கமல் கூறுகின்றார். பின்னர் 'ஒரு ஐந்து நிமிடம் பெரிய கதவை திறந்து வைக்கின்றேன். வெளியே போறேன், வெளியே போறேன் என்று படம் காண்பித்து இருக்கக்கூடாது, இந்த ஐந்து நிமிடங்களுக்குள் வெளியே செல்ல விரும்புபவர்கள் தாராளமாக செல்லலாம்' என்று கூற ஐஸ்வர்யா 'நான் போகிறேன்' என்று ஆவேசமாக எழுகிறார்.

வழக்கம்போல் இந்த வீடியோவும் புரமோவுக்காக மட்டுமே இருக்குமா? நிகழ்ச்சியில் வேறு மாதிரி இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

மீன் விற்றதாக கேலி செய்யப்பட்ட மாணவி கொடுத்த ரூ.1.5 லட்சம் வெள்ள நிதி

கேரள மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹனன் என்பவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. பட்டப்படிப்பு படித்து கொண்டே பகுதி நேரமாக மீன் விற்று வந்தார்.

கேரளாவுக்காக மீனாட்சியம்மன் கோவிலில் வழிபாடு செய்த விஷால்

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அம்மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியும், நிலச்சரிவால் பலத்த சேதமும் ஏற்பட்டுள்ளது

'சீமராஜா'வுக்கு அடுத்த சிவகார்த்திகேயன் பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள 'சீமராஜா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

பீச் என்ன பிரஸ்மீட் வைக்கும் லொகேஷனா? கஸ்தூரி

மெரீனா பீச் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை என்பதுதான். ஆனால் அதற்கு அடுத்ததாக ஞாபகம் வருவது அண்ணா மற்றும் எம்ஜிஆர் சமாதிதான்

'செக்க சிவந்த வானம்' பொன்னியின் செல்வன் கதையா?

மணிரத்னம் ஏற்கனவே இயக்கிய ஒருசில படங்கள் வரலாறு மற்றும் சரித்திர சம்பவங்களை தழுவி இருக்கும் என்பது அவரது படத்தை ஆழமாக பார்ப்பவர்களுக்கு புரிந்திருக்கும்.