கிளாமராக நடிக்க மாட்டேன் எம்பிரான் பட நாயகி - ராதிகா ப்ரீத்தி

  • IndiaGlitz, [Tuesday,June 19 2018]

கர்நாடகா கோலாரை சேர்ந்த ராதிகா ப்ரீத்தி தமிழில் அறிமுகமாகும் படம் எம்பிரான் ,

சரளமாக தமிழ் பேசும் இவர் எம்பிரான் படத்திற்கு டப்பிங் பேசியுள்ளார். இவரின் அப்பா கர்நாடகா என்றாலும் அம்மா தமிழ்நாட்டை சேர்ந்தவராம் கன்னடத்தில் பிறந்து வளர்ந்த இவர் தமிழ் மீதும் தமிழ் படங்கள் மீதும் அதீத காதல் கொண்டவராம் .

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கன்னட படம் raja loves radhe வெற்றிகரமாக 3வது வாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக தமிழில் வெளிவரவுள்ள எம்பிரான் படத்தை தான் அதிகம் எதிர்பார்க்கிறாராம் தமிழ் அதிக படங்கள் நடிக்க ஆசைப்படும் இவர் மாடர்ன் பெண்ணாக நடிப்பேன் ஆனால் கிளாமராக நடிக்க மாட்டேன் என்கிறார் . நல்ல கதையோடு வரும் தமிழ் இயக்குனர்களுக்காக காத்திருக்கிறேன் என்கிறார்.

இப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்குகிறார்

பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் மூன்று பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். யாகாவாராயினும் நா காக்க படத்திற்கு பின்னணி இசையமைத்த 'பிரசன் பாலா' இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு புகழேந்தி, படத்தொகுப்பு மனோஜ் ,கலை மாயவன், சண்டை பயிற்சி டான் அசோக், பாடல்கள் கபிலன் வைரமுத்து, நடனம் தீனா மற்றும் விஜி.

இப்படத்தின் நாயகன் ரேஜித். இவர் விக்ரமன் இயக்கிய நினைத்தது யாரோ படத்தில் நடித்தவர். நாயகியாக பெங்களூரைச் சேர்ந்த ராதிகா பிரித்தி நடிக்கிறார். இவர்களோடு சேர்ந்து மௌலி, கல்யாணி நடராஜன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

திரில்லர் கலந்த காதல் கதையாக உருவாகிவரும் இப்படதினை ஜூலை மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்

More News

விஜய்யை அடிமையாக்கிய வீடியோ கேம் எது தெரியுமா?

தளபதி விஜய்யின் பிறந்த நாள் இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட உலகம் முழுவதிலும் உள்ள விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

பிக்பாஸ் இல்லத்தில் மோதலின் தொடக்கம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சிறுசிறு மோதல்கள் நடந்தாலும் அந்த மோதல் பெரிய அளவில் இல்லை. மும்தாஜை பார்த்து பொன்னம்பலம் 'மல மல என்ற பாட்டை பாடியது,

ஜிவி பிரகாஷ் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் ஜெயகுமார்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'குப்பத்து ராஜா' திரைப்படம் வெகுவிரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் குழுவினர் இன்று சென்னை கடற்கரையை சுத்தம் செய்தனர்

'சீமராஜா' சிவகார்த்திகேயனுக்கு இன்று பிரிவு உபச்சார விழா

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சீமராஜா' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைகிறது.

பிக்பாஸ் 2: பைனல்ஸ்க்கு நாம ரெண்டு பேரும்தான்: சொல்பவர் யார் தெரியுமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க தூண்டும் வகையில் அதன் புரமோ வீடியோ இருந்து வருகிறது. அந்த வகையில் சற்றுமுன் வெளியாகியுள்ள புரமோ வீடியோவில்