நானும் யோகி ஆதித்யநாத்தும் இணைந்து.. உத்தரபிரதேசத்தில் ரஜினிகாந்த் பேட்டி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இமயமலைக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் நிலையில் அவர் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடன் ‘ஜெயிலர்’ படம் பார்க்க இருப்பதாக பேட்டி அளித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்த், அங்கு தனது நண்பர்கள் மற்றும் சாமியார்களை சந்தித்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.
அதன் பின் ஜார்கண்ட் சென்ற ரஜினிகாந்த் அம்மாநில கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்தார். இதையடுத்து தற்போது உத்தர பிரதேசம் வந்துள்ள ரஜினிகாந்த் உபி மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் ’முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை சந்தித்து அதன் பின் அவருடன் ‘ஜெயிலர்’ படத்தை பார்க்க இருப்பதாக தெரிவித்தார். மேலும் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்கு காரணம் கடவுளின் அருள் தான்' என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
After Tamil Nadu & Kerala Chief Ministers, Uttar Pradesh CM Yogi Adityanath will watch #Jailer with superstar #Rajinikanth.pic.twitter.com/hkJm0qRBYm
— Manobala Vijayabalan (@ManobalaV) August 18, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com