ரஜினியை சந்தித்து வேலைநிறுத்தம் குறித்து விளக்குவேன்: விஷால்

  • IndiaGlitz, [Thursday,March 22 2018]

திரையுலகினர்களின் தொடர் வேலைநிறுத்தம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்து இதுகுறித்து விளக்கம் அளித்த நடிகர் விஷால், விரைவில் ரஜினியை  சந்தித்து விளக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

நேற்று தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் இருதரப்பினர்களும் அடுத்து செய்ய வேண்டியது குறித்து ஆலோசனை செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஷால் கூறியதாவது:

தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களுடன் தயாரிப்பாளர்கள் அனைவரும் இணைந்து ஒரு மீட்டிங் முடிந்தது. எங்களது கோரிக்கைகள் அனைத்தையும் முன்வைத்து உள்ளோம். விபிஎஃப் கட்டணம் கட்டமுடியாத சூழ்நிலையில் உள்ளோம். அதன் பற்றியும் ஆன்லைன்லில் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்வது போன்ற செயல்களை பற்றி சில முக்கிய முடிவுகள் பற்றி பேசியுள்ளோம். இன்னும் இரண்டு நாட்களில் மீண்டும் சந்தித்து பேசி முடிவு எடுக்கவுள்ளோம்.

இன்று இயக்குநர்களுடனான சந்திப்பும் நாளை ஒளிப்பதிவாளர்களுடனான சந்திப்பும் நடைபெறவுள்ளது. அதற்கு மறுதினம் அனைத்து நடிகர்களுடனான சந்திப்பு உள்ளது. இந்த வேலை நிறுத்தமும் படங்கள் வெளியிடப்படாமல் இருப்பதும் சினிமாதுறை நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக மட்டும் தான். வேலை நிறுத்தம் முடிந்து மீண்டும் பணிகள் தொடங்கும்போது எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே ஒரு தயாரிப்பாளராக என்னுடைய விருப்பம். தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் மட்டுமே படத்தை தயாரிக்க முடியும்.

கிட்டத்தட்ட ஒரு விவசாயி போன்றவர்கள் தான் தயாரிப்பாளர்கள். ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்களோ அதே நிலைமைக்கு தான் தயாரிப்பாளர்கள் தள்ளப்படுகிறார்கள். இந்த துரையில் அனைவரும் ஒரே குடும்பமாக உள்ளோம். எங்களுக்குள் எந்த பிரிவும் இல்லை. விபிஎஃப் கட்டணம் நீக்க பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த வேலை நிறுத்தம் குறித்து கமல்ஹாசன் சாரிடம் நேரில் சந்தித்து விளக்கம் அளித்ததை போன்று ரஜினிகாந்த் சாரிடமும் நேரில் சென்று விளக்கம் அளிக்கப்படும்.

இது மூன்றாவது வேலைநிறுத்தம் ஒவ்வொரு முறையும் இவர்கள் எது வரைக்கும் தாக்கு பிடிப்பார்கள் என்று குறிப்பிட்ட சில பேர்கள் முயற்சிக்கிறார்கள். இந்த முறை மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் அனைத்து துறையினர்களும் ஒற்றுமையாக உள்ளது. இந்த வேலைநிறுத்ததை முடிவுக்கு கொண்டு வருவது தியேட்டர் உரிமையாளர்கள் கியூப் நிறுவனத்திடம் பேசி நாங்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்கும் பொருட்டு வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும்.

More News

விக்னேஷ்சிவனுடன் இணைந்து விஸ்வரூப திட்டம் போடும் நயன்?

காதல் ஜோடியாக அமெரிக்கா உள்பட பல நாடுகளுக்கு பறந்துவரும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும்

கணவர்களை துரத்தாதீர்கள், நடிகைகளுக்கு ஞானவேல்ராஜா மனைவி எச்சரிக்கை

திருமணம் ஆகாத எத்தனையோ இளைஞர்கள் திருமணத்திற்கு தயாராக இருக்கும் நிலையில் ஒருசில நடிகைகள், திருமணமானவர்களை குறிவைத்து குடும்பத்தை உடைப்பதாக ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் இருந்து வரும்

டிஜிபி அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற காவலர்கள்: சென்னையில் பரபரப்பு

மன உளைச்சல் காரணமாக காவலர்கள் தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில் இன்று இரண்டு காவலர்கள் சென்னை டிஜிபி அலுவலகம் முன்பே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது: தமிழிசை பொங்கியது ஏன்?

தமிழிசை செளந்திரராஜன் பொதுவாக செய்தியாளர்களிடம் பேசும்போது அமைதியாக பேசுவார். ஆனால் இன்று நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது என்று அவரே பொங்கி பேசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கமல்ஹாசனின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை: கவுதம் மேனன்

கமல்ஹாசன் அரசியலில் ஈடுபடுவது குறித்து என்னால் எதுவும் கூற முடியாது. அது அவருடைய உரிமை. ஆனால் நான் அவரிடம் இருந்து நல்ல திரைப்படங்களை விரும்புகிறேன்