வீதி வீதியாக சென்று மக்களை சந்திப்பேன். ஓபிஎஸ்

  • IndiaGlitz, [Wednesday,February 08 2017]

இன்றைய செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் மேலும் கூறியதாவது:

பாஜக எனக்கு பின் இருப்பதாக கூறுவது வடிகட்டிய பொய். எனக்கு பின்னால் யாரும் இல்லை. யாரும் என்னை ஆட்டுவிக்கவில்லை.

தமிழக ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட்டு வருகிறார். சென்னை திரும்பியவுடன் அவரை சந்திப்பேன். தேவைப்பட்டால் சட்டமன்றத்தில் உறுதியாக எனது பலத்தை நிரூபிப்பேன். மேலும் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து எனது தரப்பு நியாயத்தை எடுத்து கூறுவேன்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற அடிப்படையில் தீபாவுக்கு மதிப்பளிக்கிறேன். அவருக்கு விரைவில் அழைப்பு விடுப்பேன்.