அமலாபால் லைஃபில் இன்னொரு காதல்-கல்யாணம் உண்டா? அவரே அளித்த பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் விஜய்யுடன் காதல், கல்யாணம் பின்னர் அதே வேகத்தில் விவாகரத்து என கண் இமைக்கும் நேரத்தில் அமலாபால் வாழ்க்கையில் என்னென்னமோ நடந்துவிட்டது. இருப்பினும் வாழ்க்கை பயணத்தில் சந்தோஷமும், சங்கடமும் மாறி மாறி வரும் என்பதை ஏற்றுக்கொண்டு தற்போது முழு வீச்சில் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் அமலாபால்
'வடசென்னை' படத்தில் இருந்து விலகியது சற்று மனவருத்தம்தான் என்றாலும் தான் நடிக்க வேண்டிய கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு சந்தோஷமே என்றும், அவரும் இந்த கேரக்டருக்கு பொருத்தமானவரே என்றும் சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அமலாபால் கூறியுள்ளார். அதேபோல் 'விஐபி 2' படத்தில் செளந்தர்யா தனது கேரக்டரை இன்னும் மெருகேற்றியுள்ளதாகவும், ஒரு பெண் இயக்குனர் என்பதால் நினைத்ததை பேசவும் பலவிஷயங்களை பகிர்ந்து கொள்ளவும் வசதியாக இருந்ததாகவும் அமலாபால் கூறினார்.
மேலும் அமலாபால் வாழ்க்கையில் இன்னொரு காதல், திருமணம் உண்டா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், 'நான் ஒன்றும் இமயமலைக்கு சன்னியாசம் போகும் ஆள் இல்லை என்றும் கண்டிப்பாக இன்னொரு திருமணம் உண்டு என்றும், கூடிய விரைவில் அனைவருக்கும் திருமண அழைப்பிதழ் வரும் என்றும் அவர் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com