என்னால் 150 வயது வரை உயிர் வாழ முடியும், என்னை முதல்வராக்கினால் அந்த ரகசியத்தை சொல்வேன்: பிரபல தமிழ் நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
என்னால் 150 வயது வரை உயிருடன் இருக்க முடியும் என்றும் என்னை முதலமைச்சராக அந்த ரகசியத்தைச் சொல்வேன் என்றும் பிரபல தமிழ் நடிகர் ஒருவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சரத்குமார், சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: ‘எனக்கு தற்போது 69 வயது ஆகிறது, 70 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறேன், ஆனால் நான் எப்போதும் 25 வயது இளைஞன் போல் தான் இருக்கின்றேன். என்னால் 150 வயது வரை உயிருடன் இருக்க முடியும். அதற்கான வித்தையை நான் கற்று வைத்து இருக்கிறேன். அந்த வித்தையை 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் என்னை நீங்கள் முதலமைச்சர் ஆக்கினால் சொல்வேன்’ என்று கூறியுள்ளார்.
மேலும் நான் 2026 தேர்தலில் அரியணை ஏறவேண்டும் என்று சமக பொதுக்குழு தீர்மானத்தில் தெரிவித்தனர், ஆனால் அது சாத்தியமா என்பது வரும் தேர்தலில் தான் தெரியவரும். அதற்கெல்லாம் முயற்சி, நேர்மை, உடல் வலிமை, மனவலிமை இருக்க வேண்டும், நாம் போராட்டம் எதற்காக நடத்துகிறோம் என்பதை உணர்ந்து நடத்தினால் நிச்சயம் வெற்றி கிட்டும்.
மேலும் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் சிறந்த கல்வி கற்றவர்கள் இருக்கின்றனர், தமிழகத்தில் தான் மற்ற மாநிலத்தை விட சிறந்த அறிவு ஆற்றல் படைத்தவர்கள் இருக்கின்றனர், ஆனால் இந்த தடுமாற்றம் மது காரணமாக தான் உள்ளது, மதுவை ஒழிப்போம் என்று சொன்னால் அதில் அரசியல் கட்சிகள் உறுதியாக இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments