தோழியின் மரணம் அறிந்தபின் யாஷிகாவின் உருக்கமான பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடிகை யாஷிகா, அவரது தோழி பவானி மற்றும் நண்பர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது என்பதும் இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் யாஷிகாவுக்கு தனது தோழியின் மறைவு தெரியாது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு தோழியின் மறைவு தெரிவித்து விட்டதாக தெரிகிறது. இது குறித்து அவர் உருக்கமாக இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு செய்துள்ளார்.
அதில் எனது தோழியின் மரணத்தை அறிந்த உடன் என்ன செய்வது என்று தனக்கு தெரியவில்லை என்றும், தனது வாழ்நாள் முழுவதும் இது குற்ற உணர்ச்சியாக தனக்கு இருக்கும், இந்த விபத்தில் உயிரோடு மீண்டதற்கு இறைவனுக்கு நன்றி சொல்வதா? அல்லது தோழியை இழந்ததற்கு கடவுளை குற்றம் சொல்வதா? என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் ’என்னுடைய மிகவும் நெருங்கிய தோழி தற்போது இல்லை. நான் உன்னை உண்மையிலேயே ஒவ்வொரு வினாடியும் மிஸ் செய்கிறேன் பவானி. எனக்கு தெரியும் நீ என்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டாய். ஆனால் நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டே தீர வேண்டும். உனது குடும்பத்தினரை ஒரு இக்கட்டான நிலைமைக்கு நான் கொண்டுவந்து விட்டு விட்டேன். இதனால் நான் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு வினாடியும் வாழ்நாள் முழுவதும் நான் வருத்தப்பட்டு கொண்டே இருப்பேன்.
உன்னுடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று நான் கடவுளை பிரார்த்திக்கிறேன். நீ மீண்டும் எனக்காக பிறந்து வரவேண்டுமென்று நான் கடவுளை வேண்டுகிறேன். உனது குடும்பத்தாரும் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். உன்னுடைய நினைவுகளுடன் நான் வாழ்நாள் முழுவதும் கழிக்க போகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் யாஷிகா இந்த ஆண்டு தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட போவதில்லை என்றும் தனது ரசிகர்களும் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்றும் அனைவரும் தயவு செய்து பவானியின் குடும்பத்தினருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த இழப்பை தாங்கும் சக்தியை பெற பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com