என்னிக்காவது ஒரு நாள் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவேன்: அட்லி

  • IndiaGlitz, [Sunday,September 17 2023]

பொதுவாக என்னுடைய படத்தை நான் முதல் பாகத்திலேயே முடித்துவிடும் வழக்கம் உடையவன் என்றும், ஆனால் இந்த ஒரு படத்தை மட்டும் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற எனக்கு எண்ணம் ஏற்பட்டுள்ளது என்றும் இயக்குனர் அட்லி தெரிவித்துள்ளார்.

‘ராஜா ராணி’ என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகம் ஆகி அதன் பின்னர் தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை அட்லி இயக்கியுள்ளார். இந்த நிலையில் ஷாருக்கான், நயன்தாரா நடித்த ’ஜவான்’ திரைப்படத்தை இயக்கிய அட்லி அந்த படத்தை சமீபத்தில் ரிலீஸ் செய்த நிலையில் இந்த படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுவரை இயக்கிய ஐந்து படங்களும் ஹிட் ஆகியுள்ளதால் பிளாப் படம் கொடுக்காத இயக்குனர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேட்டி அளித்த போது ’பொதுவாக என்னுடைய படங்கள் முதல் பாகத்திலேயே முடிந்துவிடும் வகையில் தான் கதையை தேர்ந்தெடுப்பேன். என்னுடைய படங்களை அடுத்த பாகத்தை எடுக்க நான் விரும்பவும் மாட்டேன்.

ஆனால் ஜவான் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை மட்டும் நான் எடுக்க விரும்புகிறேன். அதற்கான கதை கிடைத்தவுடன் என்றாவது ஒருநாள் ’ஜவான்’ இரண்டாவது பாகத்தை நான் கண்டிப்பாக இயக்குவேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

எனவே ’ஜவான்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் விரைவில் எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இன்று முதல்  'லியோ' அப்டேட் ஆரம்பம்.. விஜய் ரசிகர்களை குஷிப்படுத்திய லோகேஷ் கனகராஜ்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில்

அயர்லாந்து அம்மாவுடன் பிறந்த நாள் கொண்டாடிய அமலா.. வைரல் புகைப்படம்..!

நடிகை அமலா இன்று தனது 56வது பிறந்தநாளை தனது அயர்லாந்து நாட்டின் அம்மாவுடன் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தில்லானா தில்லானா.. மீனாவின் நள்ளிரவு பிறந்த நாள் கொண்டாட்டம்.. யார் யார் வந்துருக்காங்க பாருங்க..!

நடிகை மீனா பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

'லியோ' படத்தை விஜய் பார்த்து என்ன சொன்னார் தெரியுமா? மிஷ்கின் சொன்ன முக்கிய தகவல்..!

தளபதி விஜய் 'லியோ' படத்தை பார்த்து விட்டதாகவும் நானும் இன்னும் ஒரு சில தினங்களில் பார்க்க இருக்கிறேன் என்றும் 'லியோ'  படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவரும் பிரபல இயக்குனருமான மிஷ்கின் தெரிவித்து

ரஜினி, கமல், அஜித், விஜய்யை அடுத்து இன்னொரு பிரபலம்.. த்ரிஷாவுக்கு குவியும் வாய்ப்பு..!

நடிகை த்ரிஷா ஒரே நேரத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகிய நான்கு மாஸ் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் என்பதை பார்த்தோம்.