நான் இயக்கும் படத்தின் ஹீரோ இவர்தான்: ஆர்ஜே பாலாஜி

  • IndiaGlitz, [Saturday,March 02 2019]

நடிகர் ஆர்ஜே பாலாஜி கதை, திரைக்கதை வசனம் எழுதி நடித்த 'எல்.கே.ஜி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவர் நடித்த அடுத்த படமான 'பூமராங்' திரைப்படம் வரும் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது இதில் ஆர்ஜே பாலாஜி பேசியதாவது.

நான் நடித்த 'எல்.கே.ஜி' திரைப்படம் உருவாக காரணமே அதர்வாதான். 'பூமராங்' படத்தின் படப்பிடிப்பின்போதுதான் அதர்வாவை முதன்முதலில் பார்த்தேன். சில நாட்களிலேயே நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். நாங்கள் இருவரும் பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தபோது தான் எல்.கே.ஜி படம் தொடங்கும் ஐடியா எனக்கு வந்தது. மேலும் அதர்வாவுக்காக நான் ஒரு கதை சொல்லியுள்ளேன். அந்த கதை அவருக்கு ரொம்ப பிடித்துள்ளது. கூடிய விரைவில் இந்த படத்தை இயக்குவேன்.

பூமராங் திரைப்படத்தில் கடந்த 50 ஆண்டுகளாக தீர்க்க முடியாமல் இருக்கும் நதிநீர் பிரச்சனையை வித்தியாசமாக இயக்குனர் கண்ணன் கையாண்டுள்ளார். நதிநீர் பிரச்சனை தீர்ந்தால் விவசாயிகளுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும் என்பது இந்த படத்தில் சமூக அக்கறையுடன் சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு ஆர்ஜே பாலாஜி பேசினார்.

More News

இளவயது ரஜினியை ஞாபகப்படுத்துகிறார் சிவகார்த்திகேயன்! பிரபல நடிகை

'என் சுவாச காற்றே', 'நெஞ்சினிலே', 'நரசிம்மா போன்ற தமிழ்ப்படங்களில் நடித்த நடிகை இஷா கோபிகர் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்கின்றார்.

இன்று ஒவ்வொருவரும் பெருமைப்படும் நாள்: ஓவியா

நடிகை ஓவியா சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் 'இன்று ஒவ்வொரு இந்தியனும் பெருமிப்பட வேண்டிய நாள்' என்று ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்

இணையத்தில் டிரெண்ட் ஆகும் 'கோபேக் மோடி', 'வெல்கம் அபிநந்தன்'

பிரதமர் மோடி எப்போது தமிழகம் வந்தாலும் கருப்புக்கொடி காட்டுவதை வழக்கமாக கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்றும் பிரதமர் மோடி கன்னீயாகுமரிக்கு வந்ததற்கு

கமல் கட்சியுடன் பாமக கூட்டணி வைத்திருக்கலாம்: பிரபல நடிகர் கிண்டல்

வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி என்பது கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே எதிர்பார்த்தது தான். ஆனால் இந்த கூட்டணியில் பாமக இணைந்தது பலருக்கு பெரும் அதிர்ச்சி.

கடவுள் தான் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும்: விஷ்ணு விஷால்

புல்வாமா தாக்குதல், இந்தியாவின் பதிலடி, பாகிஸ்தான் ராணுவத்தினர்களால் அபிநந்தன் கைது, இந்தியாவின் ராஜதந்திரத்தால் இன்று அபிநந்தன் விடுதலை என கடந்த சில நாட்களாக இந்தியா