தோல்வி அடைந்தாலும் அரசியலில் தொடர்வேன்: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Thursday,May 10 2018]

அரசியலில் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து நீடிப்பேன் என்று நடிகரும் மக்கள் நீதி கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்தார்.

நேற்று சென்னையில் நடந்த இந்திய தொழில்நுட்ப கூட்டமைப்பு மற்றும் வர்த்தக சபை கூட்டத்தில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள அவலநிலை மாற வேண்டும். நான் எதற்காக அரசியலுக்கு வந்தேன் என்றால், சட்டமன்றத்தில் நீதிக்கும்,நேர்மைக்கும் இன்னமும் இடம் இருக்கிறது. அதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன் என்பதை மக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

இதுவரை நடிகனாக எனது வாழ்க்கையை கடந்து விட்டேன். இனிமேல் மக்கள் பணிக்காக என்னை அர்ப்பணித்துளேன். இதை எனது வாழ்நாளின் இறுதி வரை தொடர்வேன். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். 

More News

வாழ்க்கையில் பிரபலமாக 2 வழிகள் இருக்கு: காலா ஆடியோ விழாவில் தனுஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படத்தின் ஆடியோ விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இந்த படத்தில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களும் கெளரவிக்கப்பட்டனர்

நல்லவனா இருக்கலாம், ரொம்ப நல்லவனா இருக்க கூடாது: காலா' விழாவில் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழா நடந்த ஒய்.எம்.சி.ஏ மைதானமே ரஜினி ரசிகர்களால் நிரம்பியது.

திருமணம் குறித்து 'பிக்பாஸ்' சுஜா அளித்த விளக்கம்

சுஜா வருணே, சிவாஜியின் பேரன் சிவாஜிதேவ்வை திருமணம் செய்யவிருப்பதாகவும், இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டதாகவும் கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

ரஜினி, கமல் இருவரில் ஆட்சியை பிடிப்பது யார்? குருமூர்த்தி கருத்து

கோலிவுட் திரையுலகின் இரண்டு ஜாம்பவான்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் வரும் தேர்தலில் களத்தில் குதிக்கவுள்ளனர்.

இளம் ரசிகையின் கையை விஜய் பிடித்தது ஏன்?

சமீபத்தில் சென்னையில் விஜய் தன்னுடைய ரசிகர்களை சந்தித்தபோது கேரளாவை சேர்ந்த ஏராளமான விஜய் ரசிகர்கள் அவரை பார்க்க வருகை தந்திருந்தனர். அவர்களில் ஒருவர் சரண்யா விசாக்.