நான் என் வாழ்க்கையில் சிபிஐ அலுவலகத்திற்கு செல்வேன் என நினைக்கவில்லை: விஷால்

  • IndiaGlitz, [Tuesday,November 28 2023]

நான் என் வாழ்க்கையில் சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்காக செல்வேன் என்று நினைக்கவில்லை என நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

நடிகர் விஷால் இன்று மும்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவர் நடித்து வெளியான ’மார்க் ஆண்டனி’ என்ற படத்திற்கு சென்சார் அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கில் அவர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று அவர் ஆஜராகி உள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படம் ஹிந்தி மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட நிலையில் ஹிந்தி மொழியில் சென்சார் செய்வதற்காக சென்சார் அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் கேட்டதாக ஆதாரத்துடன் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனை அடுத்து அதிரடியாக மகாராஷ்டிரா மாநில அரசு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நிலையில் இந்த வழக்கு சிபிஐக்கு மாறியது. இந்த நிலையில் இன்று விசாரணைக்காக விஷால் மற்றும் அவருடைய மேலாளர் ஆகிய இருவரும் விசாரணைக்காக மும்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆகினர்.

இது குறித்து விஷால் தனது சமூக வலைதளத்தில் கூறிய போது ’மும்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்று கொண்டிருக்கிறேன். என் வாழ்நாளில் சிபி அலுவலகத்திற்கு செல்வேன் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

More News

'பருத்திவீரன்' விவகாரம்: சமுத்திரக்கனி, பொன்வண்ணனை அடுத்து இன்னொரு இயக்குநரின் பதிவு..!

கடந்த சில நாட்களாக 'பருத்திவீரன்' விவகாரம் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சமுத்திரக்கனி, சசிகுமார், பொன்வண்ணன். சினேகன்  

சிவாஜி குடும்பத்தின் மருமகன் ஆகிறாரா பிரபல இயக்குனர்? பரபரப்பு தகவல்..!

சமீபத்தில் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர், சிவாஜி குடும்பத்தில் மருமகன் ஆக போவதாக தகவல் வெளியாகி உள்ளன.

'மாமன்னன்' படத்தில் பணிபுரிந்த முக்கிய நபர் உயிரிழப்பு.. இறப்புக்கு இதுதான் காரணமா?

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான  'மாமன்னன்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த முக்கிய நபர்

அமீருடன் வெற்றிமாறன் திடீர் சந்திப்பு.. 'பருத்திவீரன்' பிரச்சனை குறித்து ஆலோசனையா?

இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் மத்தியில் 'பருத்திவீரன்' பிரச்சனை கடந்த சில நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக ஓடி வருகிறது.

'சக்கரம்' நமக்குத்தான்: புதிய புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன்..!

தென்கிழக்கு வங்க கடலில்  காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாளில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக