'நயன்தாரா அழைத்தால் திருமணத்திற்கு செல்வேன் : சிம்பு

  • IndiaGlitz, [Monday,November 21 2016]

சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. அவர் நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிம்புவிடம் சமீபத்தில் செய்தியாளர்கள் 'நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் அடுத்த வருடம் நடைபெறும் என்று கூறப்படுகிறதே. அவர்கள் திருமணத்திற்கு செல்வீர்களா? என்று கேட்டனர். இந்த கேள்விக்கு பதிலளித்த சிம்பு, 'விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருமே தனக்கு நல்ல நண்பர்கள். என்னை திருமணத்திற்கு அழைத்தால் கண்டிப்பாக செல்வேன்' என்று கூறினார். சிம்புவின் 'போடா போடி' படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன் என்பது அனைவரும் அறிந்ததே.
மேலும் தனக்கு யாருடனும் போட்டி போட்டு நடிக்கும் எண்ணம் இல்லை என்றும், ரசிகர்களுக்கு நல்ல படத்தை கொடுக்கும் நோக்கம் மட்டுமே தனக்கு இருப்பதாகவும் அவர் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.

More News

ஹன்சிகாவுக்கு திருமணமா? புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாதது ஏன்?

ஜெயம் ரவி நடிக்கும் 'போகன்' திரைப்படத்தில் நடித்து வரும் பிரபல நடிகைகளில் ஒருவராகிய ஹன்சிகா...

'கபாலி'க்கு பின் ராதிகா ஆப்தேவின் அடுத்த தமிழ் படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தில் ரஜினியின் மனைவி கேரக்டரான குமுதவல்லி கேரக்டரில் வாழ்ந்து காட்டிய ராதிகா ஆப்தேவுக்கு...

ஹேக்கிங் பிரச்சனையில் சிக்கிய த்ரிஷா-ஹன்சிகா. பரபரப்பு தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான த்ரிஷா மற்றும் ஹன்சிகாவுக்கு ஒரே நேரத்தில் ஏற்பட்ட ஹேக்கிங் பிரச்சனையால் இருவரது...

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி

சோனாக்ஷி சின்ஹா நடித்த 'அகிரா' படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்....

வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.10 கோடி. அதிர்ச்சியில் பான்மசாலா வியாபாரி

ஜார்கண்ட் மாநிலத்தில் பான்மசாலா வியாபாரி ஒருவரின் வங்கிக்கணக்கில் திடீரென ரு.10 கோடி வந்ததால் வங்கி அதிகாரிகளும்...