வட்டியும் முதலும் சேர்த்துக் கொடுத்துடுறேன்… விஜய் மல்லையாவின் புது டெக்னிக்!!!
- IndiaGlitz, [Friday,July 17 2020]
இந்தியப் பொதுத்துறை வங்கிகளிடம் வட்டிக்குக் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா மீது இந்திய அமலாக்கத் துறையின் சார்பாக பல்வேறு வழக்குகள் தொடுக்கப் பட்டு இருக்கிறது. இவர் வாங்கிய கடன் தொகை ரூ.9000 ஆயிரம் கோடிக்கும் அதிமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் நெருக்கடியால் கடந்த ஆண்டு லண்டனுக்கு விஜய் மல்லையா தப்பிச் சென்றார். அதனால் தற்போது லண்டனில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான முயற்சியில் இந்திய அமலாக்கத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் விஜய் மல்லையாவின் சார்பாக அவரது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு தற்போது விசாரணைக்கு வந்திருக்கிறது. இந்த வழககிற்காக நீதிமன்றத்தில் ஆஜரான விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் நீதிபதிகளிடம் ரூ. 9000 ஆயிரம் கோடி கடனுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ. 13,960 ஆயிரம் கோடி ரூபாயை இந்திய வங்கிக் கூட்டமைப்பில் செலுத்தி விடுகிறோம் எனக் தெரிவித்து இருக்கிறார். இந்தக் கோரிக்கையால் இந்த வழக்கில் முக்கியத் திருப்பம் ஏற்படுமோ என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இதுகுறித்த எதிர்மறைக் கருத்துகளும் வைக்கப் பட்டு வருகின்றன.
இந்த வழக்குக் குறித்து சொலிசிடர் இயக்குநர் துஷர் மேத்தா “விஜய் மல்லையா பல ஆண்டுகளாக இப்படித்தான் கூறிவருகிறார். இந்தியா வருவதற்கு முன்பு பணத்தை செலுத்தட்டும்” எனக் கருத்து தெரிவித்து இருக்கிறார். லண்டனில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்காக இந்திய அமலாக்கத் துறை பல மாதங்களாக போராடி வருகிறது. மேலும் விஜய் மல்லையாவுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது என இந்தியாவின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் தன்னை இந்தியாவிற்கு அனுப்ப வேண்டாம் என லண்டன் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இருக்கிறார் விஜய் மல்லையா. வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ததும் குறிப்பிடத்தக்கது.
விஜய் மல்லையா இந்தியாவில் பல தொழில் நிறுவனங்கள், கிங்க் பிஷர் விமான நிறுவனம், மதுபானத் தொழிற்சாலை எனப் பல்வேறு தொழில் நுட்பக் கட்டமைப்புகளுக்கும், நிர்வாகத்திற்கும் கடன் வாங்கியிருக்கிறார். இத்தொகை பெரிதாக இருப்பதால் இந்திய மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவிற்கு விஷயம் பூதாகரமாக மாறிய நிலையில் லண்டனுக்கு தப்பிச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.