ரஜினி என்னை இப்படி அழைத்ததும் உறைந்துவிட்டேன்: 'அருவி' அதிதிபாலன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான 'அருவி' திரைப்படம் சினிமா ரசிகர்களை மட்டுமின்றி சினிமாக்காரர்களையும் கவர்ந்த ஒரு படம். ரஜினிகாந்த், ஷங்கர் முதல் கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலகமே இந்த படத்தை பாராட்டிவிட்டது.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக 'அருவி' பட இயக்குனர் அருண்பிரபு மற்றும் நாயகி அதிதிபாலனை ரஜினிகாந்த் தனது இல்லத்திற்கு அழைத்து இருவருக்கும் தங்க செயின் பரிசளித்ததை கோலிவுட் திரையுலகமே ஆச்சரியத்துடன் பார்த்தது
இந்த நிலையில் அறிமுகமான முதல் படத்திலேயே சுப்பர் ஸ்டார் கையால் தங்க செயினை தனது கழுத்தில் ஜொலிக்கவிட்டு கொண்டிருக்கும் நடிகை அதிதிபாலன் இதுகுறித்து கூறியபோது, 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் எனது நடிப்பை பாராட்டி 'நீதான் அடுத்த ஊர்வசி' என்று கூறியபோது இன்ப அதிர்ச்சியால் நான் உறைந்துவிட்டேன். மேலும் அவர் எங்கள் படக்குழுவினர்களை பாராட்டிவிட்டு ,'ரோலிங் சார்' என்று கூறி தன்னுடைய டிரேட்மார்க் சிரிப்பை உதிர்த்தபோது எங்களுக்கெல்லாம் வேற லெவல் அனுபவம் ஏற்பட்டது' என்று கூறினார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments