சுப்பிரமணியன் சுவாமியிடம் அரசியல் கற்க விரும்புகிறேன்: பிரபல நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
அரசியலை சுப்பிரமணியன் சுவாமியிடம் இருந்து கற்க விரும்புவதாக பிரபல நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடிகை காயத்ரி ரகுராம், அரசியலில் இருந்து விலகுவதாகவும், அரசியலை நன்றாக புரிந்து கொண்டு, கற்றுக்கொண்டு மீண்டும் தீவிர அரசியலில் இறங்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் காயத்ரி ரகுராம், பாஜகவில் இருந்து விலகிவிட்டதாக ஊடகங்களில் செய்தி பரவியது. இதுகுறித்து விளக்கமளித்த காயத்ரி, 'நான் பாஜகவில் இருந்து விலகவில்லை. அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியிருக்க முடிவு செய்துள்ளதாகத்தான் தெரிவித்தேன். அரசியலை இன்னும் ஆழமாக கற்றுக்கொண்டு மீண்டும் அரசியலுக்கு வருவேன்' என்று கூறினார்.
மேலும் சுப்பிரமணியம் சுவாமி அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக, ஆதாரங்களுடன் கூறுவார். அவரை பின்பற்றி, அவரை ஒரு முன்மாதிரியாக எடுத்து கொண்டு அவரிடம் இருந்து நிறைய அரசியலை கற்றுக்கொண்டு மீண்டும் விரைவில் அரசியலுக்கு வருவேன்' என்று தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com