ஷாலினிஅஜித் பாதையில் பயணிக்க விருப்பம்: மிஷ்கின் பட நாயகி

  • IndiaGlitz, [Tuesday,April 03 2018]

மிஷ்கின், ராம் நடித்த 'சவரக்கத்தி' படத்தில் நடித்த நடிகை ஸ்வாதிஷ்டா தற்போது ஜீவா நடித்து வரும் 'கீ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இளங்கலையில் எஞ்சினியரிங்கும், முதுகலையில் ஜர்னலிஸமும் படித்து முடித்துள்ள ஸ்வாதிஷ்டா, தொலைக்காட்சி தொகுப்பாளராக பணிபுரிந்து பின்னர் 'சவரக்கத்தி' படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தான் ஜர்னலிஸம் படிக்கும்போதே நிறைய பட வாய்ப்புகள் வந்ததாகவும், ஆனால் நடிக்க தயங்கியதாகவும் கூறியுள்ள ஸ்வாதிஷ்டா மிஷ்கின் பட வாய்ப்பு வந்ததும் அதை மிஸ் பண்ண மனமில்லாமல் நடிக்க வந்துவிட்டதாக கூறியுள்ளார்.

ஜீவாவுடன் நடித்து வரும் 'கீ' படத்தில் கதைக்கு வலு சேர்க்கும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதாக கூறும் ஸ்வாதிஷ்டா, இந்த படத்தில் நடித்ததால் சுஹாசினி, ராஜேந்திர பிரசாத், ஆர்ஜே பாலாஜி ஆகியோர்களுடன் நட்பு கிடைத்ததாக கூறியுள்ளார்.

மேலும் அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தான் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்றும் அவர்கள் அழகு, திறமை ஆகியவற்றை சரிவிகிதத்தில் கொண்டிருக்கிறார்கள், அவர்களுடைய நடிப்பையும், ஆளுமையையும் கண்டு வியந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் பிரமித்து பார்க்கும், அவரின் பாதையில் பயணிக்க விரும்பும் ஒரு நடிகை என்றால் அவர் ஷாலினி அஜித்குமார் தான் என்றும், அவரின் வேலையை பற்றி குறிப்பிட ஒரு இணையான சொல் கிளாசிக் தான் என்றும் கூறியுள்ளார். 

இளம் வயதிலேயே சிவாஜி சார், ரஜினி சார் ஆகியோரோடு இணைந்து நடித்தது, அவருடைய வசீகரன், திறமை எல்லாம் அவரின் தனிச்சிறப்பு என்றும் கூறிய ஸ்வாதிஷ்டா, மணிரத்னம் சார் அலைபாயுதே 2 படத்தை எடுப்பார், அதில் தன்னை நாயகியாக நடிக்க வைப்பார்” என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.

More News

கஸ்தூரி கூறும் தல, தளபதியின் மைனஸ்களை ரசிகர்கள் ஏற்பார்களா?

நடிகை கஸ்தூரி படங்களில் அதிகம் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் தனது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்து அவ்வப்போது டிரெண்டிங்கில் இருப்பார்.

அஜித்தை அடுத்து பிரபல நடிகரின் படத்தில் அக்சராஹாசன்

ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சீயான் விக்ரம் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தை 'தூங்காவனம்' இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கவுள்ளார் என்ற செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

தமிழக அரசை நம்புகிறோம்: தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை

தமிழ் திரை உலகத்துக்காக நல வாரியம் மற்றும் அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும் என நம்புகின்றோம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக அமைச்சரின் அதிரடி அறிவிப்புக்கு நன்றி கூறிய விஷால்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான 'திரைப்படத்துறைக்கு என தனி வாரியம்' வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்து தேவைப்பட்டால் வாரியம் அமைக்கப்படும்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனைபற்றி தெரியாத தமிழர்கள் இருக்க முடியாது