ஷாலினிஅஜித் பாதையில் பயணிக்க விருப்பம்: மிஷ்கின் பட நாயகி
Send us your feedback to audioarticles@vaarta.com
மிஷ்கின், ராம் நடித்த 'சவரக்கத்தி' படத்தில் நடித்த நடிகை ஸ்வாதிஷ்டா தற்போது ஜீவா நடித்து வரும் 'கீ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இளங்கலையில் எஞ்சினியரிங்கும், முதுகலையில் ஜர்னலிஸமும் படித்து முடித்துள்ள ஸ்வாதிஷ்டா, தொலைக்காட்சி தொகுப்பாளராக பணிபுரிந்து பின்னர் 'சவரக்கத்தி' படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தான் ஜர்னலிஸம் படிக்கும்போதே நிறைய பட வாய்ப்புகள் வந்ததாகவும், ஆனால் நடிக்க தயங்கியதாகவும் கூறியுள்ள ஸ்வாதிஷ்டா மிஷ்கின் பட வாய்ப்பு வந்ததும் அதை மிஸ் பண்ண மனமில்லாமல் நடிக்க வந்துவிட்டதாக கூறியுள்ளார்.
ஜீவாவுடன் நடித்து வரும் 'கீ' படத்தில் கதைக்கு வலு சேர்க்கும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதாக கூறும் ஸ்வாதிஷ்டா, இந்த படத்தில் நடித்ததால் சுஹாசினி, ராஜேந்திர பிரசாத், ஆர்ஜே பாலாஜி ஆகியோர்களுடன் நட்பு கிடைத்ததாக கூறியுள்ளார்.
மேலும் அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தான் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்றும் அவர்கள் அழகு, திறமை ஆகியவற்றை சரிவிகிதத்தில் கொண்டிருக்கிறார்கள், அவர்களுடைய நடிப்பையும், ஆளுமையையும் கண்டு வியந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் பிரமித்து பார்க்கும், அவரின் பாதையில் பயணிக்க விரும்பும் ஒரு நடிகை என்றால் அவர் ஷாலினி அஜித்குமார் தான் என்றும், அவரின் வேலையை பற்றி குறிப்பிட ஒரு இணையான சொல் கிளாசிக் தான் என்றும் கூறியுள்ளார்.
இளம் வயதிலேயே சிவாஜி சார், ரஜினி சார் ஆகியோரோடு இணைந்து நடித்தது, அவருடைய வசீகரன், திறமை எல்லாம் அவரின் தனிச்சிறப்பு என்றும் கூறிய ஸ்வாதிஷ்டா, மணிரத்னம் சார் அலைபாயுதே 2 படத்தை எடுப்பார், அதில் தன்னை நாயகியாக நடிக்க வைப்பார்” என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com