இந்திய பிரதமராக விரும்பும் விஜய் பட நாயகி!

  • IndiaGlitz, [Wednesday,June 05 2019]

விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. அதன்பின்னர் அவர் தமிழில் நடிக்கவில்லை என்றாலும் பாலிவுட்டிலும் ஹாலிவுட்டில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்றார்.

இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா, 'தனக்கு இந்திய பிரதமராகும் ஆசை இருப்பதாக தெரிவித்தார். இருப்பினும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு தற்சமயம் இல்லை' என்றும் அவர் கூறினார்.

மேலும் மாற்றம் என்பது உயர் பதவியில் இருந்து கொண்டு வர வேண்டும் என்றும் அப்போதுதான் உண்மையான மாற்றம் இருக்கும் என்றும் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்தார். பிரியங்கா சோப்ராவின் பிரதமர் ஆசை குறித்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.