ஏமாற்றிய ஐபிஎல்… சுரேஷ் ரெய்னாவின் அடுத்த பிளான் குறித்த சுவாரசியத் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
15 ஆவது சீசன் போட்டிகளுக்கான ஐபிஎல் ஏலம் நடந்துமுடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னாவை ஐபிஎல் ஏலத்தில் எந்த அணிகளும் எடுக்காதது கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அடுத்த நகர்வு குறித்து சுரேஷ் ரெய்னாவிடம் கேள்வி எழுப்பியபோது அவர் சமையல்காரர் ஆக விரும்புகிறேன் என்று சுவாரசியமான பதிலைக் கூறியிருக்கிறார்.
ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக விளையாடி வருபவர் சுரேஷ் ரெய்னா. இவரை ரசிகர்கள் சின்ன தல என்றே அழைத்துவந்தனர். அந்த அளவிற்கு தோனிக்கு பிறகு முக்கியத்துவம் வாய்ந்த வீரராகக் கருதப்பட்டார். இதுவரை 205 போட்டிகளில் 5528 ரன்களுடன் 1 சதம் மற்றும் 39 அரை சதத்தை அடித்த இவர் கடந்த 2 சீசன் போட்டிகளிலும் பெரிதாகச் சோபிக்காமல் இருந்துவந்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் துபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் காயம் காரணமாக சுரேஷ் ரெய்னா கலந்து கொள்ளவில்லை. அப்போது சிஎஸ்கே அணி தகுதிச்சுற்றிற்கே தகுதிப்பெறாமல் வெளியேறியது. இதற்கு சுரேஷ் ரெய்னா இல்லாததே காரணம் என்றும் ரசிகர்கள் கூறிவந்த நிலையில் கடந்த ஆண்டு ஐபிஎல்-லிலும் இவர் அதிக போட்டிகளில் கலந்துகொள்ளாமல் இருந்துவந்தார்.
தற்போது 35 வயதாகும் சுரேஷ் ரெய்னாவை ஐபிஎல் அணிகள் எதுவும் ஏலம் எடுக்காமல் விட்டுவிட்டது. நீண்டநாள் நண்பரான சிஎஸ்கேவும் இவரை கைவிட்டுவிட்ட நிலையில் அடுத்து என்ன செய்ய போகிறீர்கள் என்று அரசியலில் குதிக்கப் போகிறீர்களா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கிரிக்கெட்தான் என்னுடைய ஒரே காதல். மேலும் நான் கிரிக்கெட்டில் உறுதியாக இருப்பேன். எனக்கு தெரிந்த விளையாட்டு. அரசியல் எனக்கு அதிகம் புரியவில்லை.
மேலும் நான் இப்போது ஒரு நல்ல செஃப் ஆக விரும்புகிறேன். ஒவ்வொரு சமையலையும் நன்றாக சமைக்க விரும்புகிறேன், ஒவ்வொரு இடத்திற்கும் சென்று பார்க்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். சுரேஷி ரென்யாவின் இந்தப் பதில் தற்போது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்திவருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments