என் தந்தையை நான் நம்புகிறேன்: மதன் கார்க்கி
Send us your feedback to audioarticles@vaarta.com
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு கேரளாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான ஓ.என்.வி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பாடகி சின்மயி, நடிகை பார்வதி, கவிஞர் தாமரை உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த விருதை வைரமுத்துவுக்கு வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்வதாக அறிவித்தது. இருப்பினும் வைரமுத்துவுக்கு ஆதரவாக சீமான், பாரதிராஜா உள்ளிட்டோர் பலர் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் தனது தந்தை மீதான குற்றச்சாட்டு குறித்து மதன் கார்க்கி தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் ’உங்கள் தந்தையையும் தாயையும் வெறுத்து சிலர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்தால் உங்கள் பெற்றோர் அதை மறுக்கும் போது நீங்கள் யாரை நம்புவீர்கள்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் ’நான் எனது தந்தையை முழுமையாக நம்புகிறேன் என்றும், தங்கள் பக்கம் உண்மை உள்ளதாக குற்றம் சாட்டுபவர்கள் நம்பினால் அவர்கள் அதை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லட்டும்’ என்றும் பதிவு செய்துள்ளார், மதன் கார்க்கியின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
If a group of people hate your family and throw baseless accusations on your dad or mom, and your parent denies those accusations, who will you trust?
— Madhan Karky (@madhankarky) May 29, 2021
I trust my dad.
If the concerned people believe they have truth on their side, let them take it to the legal authorities.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments