விஜய் அரசியலுக்கு வந்தால் என் சப்போர்ட் அவருக்குத்தான்: பிரபல ஹீரோ
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக அரசியல் களம் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இரண்டு திரையுலக ஜாம்பவான்களாக கமலஹாசன் ரஜினிகாந்த் ஆகிய நடிகர்களை எதிர்நோக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கமலஹாசன் ஏற்கனவே அரசியல் கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார் என்பதும், ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி களமிறங்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கவை.
இந்த நிலையில் விஜய் உள்பட பலரும் தமிழக அரசியலில் எதிர்காலத்தில் ஈடுபடலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. இந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகனும் பிரபல நடிகருமான துல்கர் சல்மான் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்தால் அவருக்கு தான் என்னுடைய சப்போர்ட் என்றும் விஜய் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்வார் என்றும் இப்போதே அவர் பல நன்மைகளை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமன்றி திரையுலகில் தான் சவாலாக நினைப்பது விஜய் அவர்களை தான் என்றும் அவருக்கு போட்டியாக தான் வர ஆசை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் விஜய் அரசியலுக்கு வருவாரா? என்பது தெரியவில்லை இருப்பினும் அவர் அரசியல் வருவதை இப்போதே இளைய தலைமுறை நடிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படம் சூப்பர் ஹிட்டானது என்பது தெரிந்ததே.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments