இந்த விஷயத்தில் ரஜினிக்குத்தான் எனது ஆதரவு: சுப்பிரமணியன் சுவாமி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை பலமுறை கடுமையாக விமர்சனம் செய்தவர்களில் ஒருவர் சுப்பிரமணியன்சுவாமி. சமீபத்தில்கூட ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டார் என்றும் அப்படியே வந்தாலும் அவர் தலைவராக வரக்கூடாது என்றும் தொண்டனாக அரசியல் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பெரியார் பிரச்சனையில் ரஜினியின் பெயர் தற்போது பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தப் பிரச்சினையில் ரஜினிக்குதான் ஆதரவு தரத் தயார் என்று சுப்பிரமணியன் சுவாமி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
1971-ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியார் பேரணியில் ராமர் மற்றும் சீதையை கேவலமாக சித்தரித்து அணிவகுத்துச் சென்றது உண்மை, இதனை சோ ராமசாமி துக்ளக் இதழில் பதிவிட்டுள்ளார். எனவே, நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தில் உறுதியாக இருந்தால், தேவைப்பட்டால் ஒரு மாற்றத்திற்காக இம்முறை அவருக்கு நீதிமன்றத்தில் சட்ட ரீதியில் ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
For a change I am on the side of Rajnikant on the E. V. R. Naicker 1971 rally issue of parading Ram and Sita in a derogatory. This is a fact and Cho had published it in Thuglak. If the cine actor stays firm I will back him in courts if he wants
— Subramanian Swamy (@Swamy39) January 21, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com