நடிகர் சங்க தேர்தல்: விஜய்சேதுபதி ஆதரவு யாருக்கு?

  • IndiaGlitz, [Wednesday,June 12 2019]

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் விஷால் அணி, பாக்யராஜ் அணி ஆகிய இரு அணிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் நடிகர், நடிகைகள் இடையே தீவிர ஓட்டுவேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்சேதுய்பதி தனது ஆதரவு யாருக்கு என்பதை நேற்று நடந்த 'சிந்துபாத்' இசை வெளியீட்டிற்கு பின்னர் அளித்த பேட்டியில் விளக்கியுள்ளார். தான் ஒரு அணியில் பேசியிருப்பதாகவும், அந்த அணியினர் கூறிய கருத்து தனக்கு பிடித்ததால் அந்த அணிக்கு ஆதரவு அளித்து ஓட்டு போடவுள்ளதாகவும், அந்த அணி எந்த அணி என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது என்றும் விஜய்சேதுபதி கூறியுள்ளார்.

மேலும் சினிமாவில் காலங்காலமாக பல பிரச்சனைகள் இருந்து வருவதாகவும், அந்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக தீர்க்கப்பட்டால் சந்தோஷம் என்றும், சினிமா என்பது நடிகர், நடிகை இயக்குனர் என நீங்கள் போஸ்டரில் பார்க்கும் ஒருசிலர் மட்டும் கிடையாது என்றும் அதனையும் தாண்டி சினிமாவின் பின்னால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இருப்பதாகவும் அவர்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்றும் விஜய்சேதுபதி கூறினார்

More News

ஆன்லைனில் பிச்சை எடுத்து 17 நாட்களில் லட்சாதிபதியாகிய பெண் கைது!

இன்றைய தலைமுறையினர்களுக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் இண்டர்நெட். இந்த இண்டர்நெட் மூலம் பள்ளி மாணவர்கள் முதல் தொழிலதிபர்கள் மூலம் பெரும்பயன் பெற்று வருகின்றனர்.

இதுக்கும் அதுக்கும் என்னய்யா சம்பந்தம்? கருணாஸை கலாய்த்த சாந்தனு!

நாடக கலைஞர்களிடம் ஓட்டு கேட்க செல்லும்போது காசு கொடுப்பது குறித்து நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்யராஜ் கூறிய ஒரு கருத்து குறித்து பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில்

அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: நேர் கொண்ட பார்வை டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தல அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே

கிளாப் அடித்து 'கிளாப்' படத்தை தொடங்கி வைத்த இளையராஜா!

கோலிவுட் திரையுலகில் ஏற்கனவே 'தளபதி 63', 'கென்னடி கிளப்' உள்பட ஒருசில ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் இன்று மேலும் ஒரு ஸ்போர்ட்ஸ் திரைப்படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது

முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் ராதாரவி

சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட விழாவில் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடிகர் ராதாரவி இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.