10 சதவீதம்தான் சொல்லி இருக்கின்றேன். ஓபிஎஸ். மீதியை எப்போது சொல்வார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்றிரவு சென்னை மெரீனாவில் மீண்டும் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அவர் எழுப்பிய புரட்சியால் தமிழகமே அதிர்ந்து போயுள்ளது. ஒரு முதல்வரை மிரட்டும் அளவுக்கு துணிச்சல் எப்படி வந்தது? என்று அதிர்ச்சியுடன் மக்களும், அதிமுகவின் உண்மையான தொண்டர்களும் கூறி வருகின்றனர். மேலும் தங்கள் முழு ஆதரவை ஓபிஎஸ் அவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி வழியாக பேட்டி அளித்த ஓபிஎஸ் அவர்கள் 'நான் கூறியது 10 சதவீதம்தான். மீதியை அரசியல் நாகரீகம் கருதி சொல்லவில்லை' என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
அதிமுக கழகத்தில் உள்ள பிரச்னைகளில் வெறும் 10 சதவீதம் தான் தற்போது கூறியுள்ளேன். எனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அம்மாவின் நினைவிடத்தில் பேட்டி கொடுக்க வேண்டிய கட்டாய சூழலுக்கு ஆளாக்கப்பட்டேன்.
சாதரண தொண்டனான என்னை மாண்புமிகு அம்மா அவர்கள் உயர்த்தினார். அந்த விசுவாசத்தால் என்னை முதலமைச்சராக்கிய பொழுதும் கட்சிக்கும் ஆட்சிக்கும் சிறிதளவு பங்கம் கூட அம்மாவின் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதால் சரியாக செய்ய வேண்டும் என பார்த்து பார்த்து செய்தேன்.
நான் முதல்வராக இருக்கும் போது சில அமைச்சர்கள் கழக பொதுச் செயலாளரே முதல்வராக வேண்டும் என்ற கருத்து தெரிவித்தனர். அது என் மனதை மிகவும் பாதிக்க செய்தது. சக அமைச்சர்களே முதல்வராக இருந்த என்னை அசிங்கப்படுத்தினர். இது போன்ற சூழல் அம்மா இருந்திருந்தால் ஏற்பட்டிருக்காது. எனக்கு கிடைத்த நல்ல பெயரை கழகத்தின் தலைமை விரும்பவில்லை. இருப்பினும் அமைச்சர்கள் மீது அதிருப்தி காட்டாமல் பணியை மட்டும் செய்தேன்.
முதலமைச்சர் பதவி வேண்டாம் என கூறியபோதும், அந்த பொறுப்பை என்னிடம் கொடுத்து, நான் சாந்தித்த அவமானங்கள் அதிகம். வேதனையுடன் இந்த 60 நாட்களை கழித்தேன். அதற்கு பரிகாரம் தேடுவதற்காகவே ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்றேன்.
என் விசுவாசத்தை பார்த்து தான், நான் கேட்காமலே எனக்கு ஜெயலலிதா பதவியை கொடுத்தவர். அவர் கொடுத்த பதவிக்கு பங்கம் வராமல் சரியாக செய்து வந்தேன். அம்மாவின் ஆன்மா என்றும் எனக்கு துணையாக இருக்கும்' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout