லாக்டவுன் இல்லைன்னு சொன்னா இப்படித்தான் ஆடுவேன்: ரஜினி, அஜித் நாயகி

  • IndiaGlitz, [Thursday,May 21 2020]

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் கோடிக் கணக்கான பொதுமக்கள் திண்டாட்டத்தில் உள்ளனர். இருப்பினும் தற்போது நான்காவது கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கிட்டத்தட்ட நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவே கருதப்படுகிறது. மேலும் ரயில் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து விரைவில் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இயல்பு வாழக்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் ஊரடங்கு இனி நீட்டிக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்த கொரோனா விடுமுறையில் நடிகர் நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் நடித்தவரும் அஜீத் நடித்து வரும் ’வலிமை’ படத்தில் நடித்து வருபவருமான ஹூமா குரேஷி தனது சமூக வலைத்தளத்தில் தான் ஆட்டம் போடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இனிமேல் லாக்டவுன் இல்லை என்ற அறிவிப்பு வந்தால் என்னுடைய டான்ஸ் இப்படித்தான் இருக்கும் என்று அவர் கூறி ஒரு இந்தி பாடலுக்கு நடனமாடியுள்ளார். ஹூமோ குரேஷின் இந்த நடன வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

https://igimage.indiaglitz.com/tamil/home/huma210520_3.jpg

More News

ஆன்லைனில் தந்தூரி சிக்கன் ஆர்டர் செய்த கொரோனா நோயாளிகள்: மருத்துவர்கள் அதிர்ச்சி

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவ மருத்துவமனைகளில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் சிலரின் அட்டகாசம் தாங்க முடியாமல் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் தவித்து வருவதாக செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1 லட்சத்து 6 ஆயிரம் புதிய கொரோனா நோயாளிகள்: WHO அதிர்ச்சி!!!

கடந்த 24 மணிநேரத்தில் உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரமாக பதிவாகி இருப்பதாக

24 மணி நேரத்தில் 5609 பேர் பாதிப்பு: இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 1,06,750ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 5609 பேர் புதியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால்

கிராமத்தில் விவசாயியாக மாறிய பிரபல ஹீரோ!

தமிழ் திரை உலகில் 'மதயானைகூட்டம்' என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி அதன் பின்னர் 'கிருமி' 'விக்ரம் வேதா' உள்பட ஒரு சில படங்களில் நடித்த நடிகர் கதிருக்கு கோலிவுட்

எப்படி இருக்கான் உன் ஆளு? 'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்

சிம்பு, த்ரிஷா நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த 'விண்ணை தாண்டி வருவாயோ' படத்தை யாரும் மறக்க முடியாது. கார்த்திக், ஜெஸ்ஸி கேரக்டர்கள் நம் மனதிற்குள்ளே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும்