கருணாநிதி உருவத்தில் எம்.ஜி.ஆரையும், சிவாஜியையும் பார்த்தேன்: மயில்சாமி
- IndiaGlitz, [Saturday,December 23 2017]
கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி பூரண ஓய்வு எடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து வரும் நிலையில் சற்றுமுன்னர் நகைச்சுவை நடிகர் மயில்சாமி கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மயில்சாமி, 'நான் ஒரு எம்ஜிஆர் பக்தன். கருணாநிதியை இன்று ஏன் பார்க்க வந்தேன் என்றால், 'ஒரு 'எங்கள் தங்கம்' என்ற எம்ஜிஆர் படத்தை பார்க்கும்போது எம்ஜிஆரின் முகத்தில் கலைஞரை பார்த்தேன். ஒரு மனோகரா என்ற சிவாஜி படத்தை பார்க்கும்போது அவருடைய முகத்தில் கலைஞரை பார்த்தேன்
இன்று நான் கலைஞர் அவரக்ளை பார்க்கும்போது குழந்தை உருவத்தில் இருந்ததை பார்த்தேன். அவருடைய உருவத்தில் எம்ஜிஆரையும் சிவாஜியையும் பார்த்த சந்தோஷம் எனக்கு கிடைத்தது.