close
Choose your channels

அஜித் படத்தை இயக்க மறுத்துவிட்டேன். பிரபல நடிகையின் கணவர்

Thursday, March 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை தேவயானியின் கணவரும் இயக்குனருமான ராஜகுமாரன் இயக்கிய முதல் படமான 'நீ வருவாய் என' படத்தில் பார்த்திபன் ஹீரோவாக நடித்திருந்தாலும் அந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்தவர் அஜித். தற்போது விஜய் மில்டனின் 'கடுகு' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ராஜகுமாரன், இந்த படத்தின் புரமோஷனில் அஜித்தை இயக்கிய அனுபவம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:

பொதுவாக ராமராஜன் சட்டை என அழைக்கப்படும் `பளீர்` நிற சட்டைகளை அணிய தமிழ் சினிமா ஹீரோக்கள் விரும்புவதில்லை. ஆனால் என்னுடைய படத்தின் ஹீரோக்கள் அனைவரையும் இந்த நிறத்திலான சட்டைகளைத்தான் அணிய வைப்பேன்.

ஆனால் மற்ற ஹீரோக்களை விட, அஜித் சாருக்கு தான் பளீர் நிற சட்டைகள் மிக அழகாக ,பொருத்தமாக இருந்தது. ஆனால் இப்போது அந்த பழைய அஜித்தை பார்க்க முடியுமா? என்னுடைய படத்தில் வேட்டி கட்டி பளீர் நிறத்தில் சட்டை அணிந்து கிராமத்து பாணியிலான அஜித்தை இப்போது பார்க்க முடியுமா? நீ வருவாய் என படத்திற்கு பிறகு, மீண்டும் அஜித்தை வைத்து படம் இயக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அதனை நான் மறுத்துவிட்டேன்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment