அஜித் படத்தை இயக்க மறுத்துவிட்டேன். பிரபல நடிகையின் கணவர்
- IndiaGlitz, [Thursday,March 16 2017]
பிரபல நடிகை தேவயானியின் கணவரும் இயக்குனருமான ராஜகுமாரன் இயக்கிய முதல் படமான 'நீ வருவாய் என' படத்தில் பார்த்திபன் ஹீரோவாக நடித்திருந்தாலும் அந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்தவர் அஜித். தற்போது விஜய் மில்டனின் 'கடுகு' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ராஜகுமாரன், இந்த படத்தின் புரமோஷனில் அஜித்தை இயக்கிய அனுபவம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:
பொதுவாக ராமராஜன் சட்டை என அழைக்கப்படும் 'பளீர்' நிற சட்டைகளை அணிய தமிழ் சினிமா ஹீரோக்கள் விரும்புவதில்லை. ஆனால் என்னுடைய படத்தின் ஹீரோக்கள் அனைவரையும் இந்த நிறத்திலான சட்டைகளைத்தான் அணிய வைப்பேன்.
ஆனால் மற்ற ஹீரோக்களை விட, அஜித் சாருக்கு தான் பளீர் நிற சட்டைகள் மிக அழகாக ,பொருத்தமாக இருந்தது. ஆனால் இப்போது அந்த பழைய அஜித்தை பார்க்க முடியுமா? என்னுடைய படத்தில் வேட்டி கட்டி பளீர் நிறத்தில் சட்டை அணிந்து கிராமத்து பாணியிலான அஜித்தை இப்போது பார்க்க முடியுமா? நீ வருவாய் என படத்திற்கு பிறகு, மீண்டும் அஜித்தை வைத்து படம் இயக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அதனை நான் மறுத்துவிட்டேன்' என்று கூறினார்.