எல்லா நெகட்டிவ் கமெண்ட்ஸ்களையும் படித்தேன்: எவிக்ட்டான பின் ஆஜித்தின் முதல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று ஆஜித் வெளியேறி விட்டார் என்பதை அனைவரும் பார்த்திருப்போம். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் முதல்முறையாக ஆஜித் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
அனைவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்து இருப்பீர்கள். நான் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் ஆகிவிட்டேன். 90 நாட்களுக்கும் மேலாக நான் அந்த வீட்டில் இருப்பதற்காக நீங்கள் வாக்கு அளித்தது என்பது ஒரு பெரிய விஷயம். அதற்காக நான் உங்கள் அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.
இந்த பிக்பாஸ் பயணத்திற்கு உங்களுடைய ஆதரவு மிகவும் நன்றாக இருந்தது. என்னைப்பற்றி இன்ஸ்டாகிராமில் ஒரு சிலர் பதிவு செய்து இருந்த பதிவுகளை நான் பார்த்தேன். அவை எல்லாம் மிகவும் அழகாக இருந்தது. இது போன்ற பதிவுகளை நான் பார்த்து பல வருஷம் ஆகிவிட்டது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்திருந்தாலும் மக்களை என்டர்டைன்மென்ட் செய்வதற்காக என்னால் முடிந்ததை நான் செய்து கொண்டு இருப்பேன். இன்னும் பெரிய அளவில் திட்டமிடவில்லை, இனிமேல் தான் யோசிக்க வேண்டும். ஆனால் கண்டிப்பாக மக்களை என்டர்டைன்மென்ட் செய்வேன் என்பதை உறுதி கூறுகிறேன். என்னை பற்றி வேறு ஏதாவது அப்டேட் இருந்தாலும் நான் உடனடியாக உங்களிடம் தெரிவிக்கின்றேன்.
மீண்டும் ஒருமுறை எனக்கு ஆதரவு தந்த அனைத்து மக்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். நீங்கள் வாக்கு போடாமல் இருந்தால் நான் அந்த வீட்டில் 13 வாரம் இருந்திருக்க முடியாது. மேலும் நான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் அனைத்தையுமே நான் படித்தேன். குறிப்பாக என்னை பற்றிய நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை நான் முழுவதுமாக பார்த்தேன். பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் ஒவ்வொரு போட்டியாளருக்கும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் வரும் என்பது எனக்கு தெரியும். நெகட்டிவ் விமர்சனத்தில் நான் ஏற்றுக் கொள்ளும் விஷயங்கள் இருந்தால் கண்டிப்பாக அதை நான் ஏற்றுக் கொள்வேன் என்று ஆஜித் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments