மக்கள் பணத்தை கொள்ளையடிக்க உதவி செய்யுங்கள். வேட்பாளரின் நூதன கோரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரபிரதேசத்தில் வரும் பிப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்துவிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் தற்போது சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்த தேர்தலில் ஏராளமான சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் சுயேட்சை வேட்பாளர் கோபால் சவுத்ரி என்பவர் நூதனமான தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் தனது பிரச்சாரத்தில், 'அரசியலுக்கு வந்தால் மக்களின் பணத்தை கொள்ளையடித்து எளிதாக அதிக பணம் சம்பாதித்து வீடு கட்ட வேண்டும் என்ற நோக்கத்தினால்தான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.
ஆனால் நான் அரசியலுக்கு புதிது என்பதால் நான் வெற்றி பெற்றவுடன் பின்னர் மக்கள் பணத்தை எப்படி கொள்ளையடிப்பது, அவர்களை எப்படி ஏமாற்றுவது என ஏற்கனவே கொள்ளையடித்தவர்கள் எனக்கு கற்றுத் தர வேண்டும்.
பிரதமர் மோடி 125 கோடி பேரை ஏமாற்றி தேர்தலில் வெற்றி பெற்றார். அவரை போலவே நானும் மக்களை ஏமாற்றி வெற்றி பெறுவது எப்படி என்று யோசித்து வருகிறேன்' என்று கூறியுள்ளார். இவருடைய இந்த நூதன பிரச்சாரத்தை வட-இந்திய ஊடகங்கள் திரும்ப திரும்ப ஒளிபரப்பி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com