பெண்கள் பொறாமை கொண்டவர்கள், நான் ஆண்களை மட்டுமே நம்புவேன்: வனிதா
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா விஜயகுமார் சமீபத்தில் பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் என்பது தெரிந்ததே. இந்தத் திருமணம் முடிந்து ஒரு நாள் கூட முழுதாக முடியாத நிலையில் பீட்டரின் முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது, தனது கணவரை மீட்டு எடுப்பேன் என்று அதிரடியாக பேட்டி கொடுத்து என பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த பிரச்சனையை நாங்கள் சட்டபூர்வமாக சந்திப்போம் என்று வனிதாவும் பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வனிதா விஜயகுமார் தனது சமூக வலைத்தளத்தில் ஒருசில பெண்கள் பொறாமை பிடித்தவர்களாக இருப்பதாகவும் எனவே தான் எப்போதுமே ஆண்களை தான் நம்புவேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது.
ஆண்களை குடிகாரர்கள் பெண் பித்துப் பிடித்தவர்கள் என்று அழைப்பது மிகவும் எளிதானது. ஆனால் பெண்களை விட ஆண்கள் தான் எனக்கு அதிகமாக நண்பர்களாக உள்ளனர். நான் ஆண்களை மட்டுமே முழுமையாக நம்புகிறேன். சில பெண்கள் அதிக பொறாமை கொண்டவர்களாகவும் தந்திரமானவர்களாகவும் இருக்கின்றார்கள். என்னை ஒரு ஆண் பேரினவாதி என்று அழைத்தாலும் எனக்கு கவலை இல்லை. ஆனால் நான் ஒரு பெண்ணியவாதி அல்ல. பாலினத்தை பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்டவர்களுக்காக மட்டுமே நான் இருப்பேன்’ என்று வனிதா கூறியுள்ளார். வனிதாவின் இந்த சமூக வலைதள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Very easy to call men drunkards,womanizers and abusers...I have more men as friends than women
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) June 28, 2020
..I would trust a man any day..some women are more jealous and Cunning then men...call me a male chauvinist but not a feminist
..I stand by legitimate victims..irrespective of gender
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments