7 சிக்ஸர் அடிக்க முடிந்தது எப்படி? ரகசியத்தை வெளியிட்ட ரஸல்

  • IndiaGlitz, [Saturday,April 06 2019]

நேற்று நடைபெற்ற பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி ஐந்து விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 206 என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 12 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. கிட்டத்தட்ட பெங்களூர் வெற்றி பெற்றுவிட்டதாகவே பலர் நினைத்தனர். ஆனால் அந்த நினைப்பை தவிடுபொடியாக்கியவர் ஆண்ட்ரு ரஸல்.

19வது ஓவரில் அவர் அடித்த 29 ரன்கள் ஆட்டத்தை தலைகீழாக மாற்றிவிட்டது. இந்த போட்டியில் ரஸல் 13 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். அதில் 7 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடங்கும்.

இதுகுறித்து ரஸல் கூறியபோது, 'நான் எப்போதும் விளையாடும்போது ஸ்கோர் போர்டை பார்க்க மாட்டேன். என்னால் எத்தனை சிக்ஸர் அடிக்க முடியுமோ, அத்தனை சிக்ஸர்கள் அடிக்க வேண்டும் என்பதிலேயே எனது கவனம் இருக்கும். அதனால்தான் என்னால் ஏழு சிக்ஸர்கள் அடிக்க முடிந்தது' என்று கூறினார். நேற்றைய போட்டியில் அவர் தான் ஆட்டநாயகன் விருதினை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

சத்ருஹன்சின்ஹா போட்டியிடும் தொகுதி அறிவிப்பு

பாஜகவில் இருந்த பிரபல பாலிவுட் நடிகர் சத்ருஹன்சின்ஹா, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக அறிவித்தார்.

எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தில் இருந்து திடீரென விலகிய நடிகை!

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி மற்றும் 'பாகுபலி 2' ஆகிய திரைப்படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட்டான நிலையில்

ரஜினி மகளாக நடிக்கும் 'கமல்' மகள்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'தலைவர் 167' திரைப்படத்தின் போட்டோஷூட் சமீபத்தில் நடந்த நிலையில்

பிரபல நடிகருடன் காதலா? நடிகை ரெஜினா விளக்கம்

'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'மாநகரம்', 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' உள்பட பல படங்களில் நடித்த நடிகை ரெஜினா, தெலுங்கு நடிகருடன் காதல் என்று வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி, வதந்தி

சிவில் சர்வீஸ் தேர்வில் பழங்குடியின பெண் வெற்றி: கமல். ராகுல்காந்தி வாழ்த்து

கடந்த செப்டம்பர், அக்டோபரில் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் 759 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்